For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிம்ஸ்டெக் மாநாடு: 2 நாள் பயணமாக நேபாளத்திற்கு சென்றார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

காத்மண்டு: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நேபாளத்தில் தற்போது பிம்ஸ்டெக் மாநாடு நடக்கிறது. இந்தியா, மியான்மர், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய ஆசிய நாடுகள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறது. இந்த பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மாநாடு இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறும்.

Modi in Nepal: Will discuss with Asian country leaders on BIMSTEC meet

நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்தும், வளர்ச்சி குறித்தும் இதில் விவாதம் செய்யப்படும். அதேபோல் சில முக்கியமான எல்லை பிரச்சனைகள் குறித்தும் இதில் விவாதம் செய்யப்படும். நாடுகளுக்கு இடையேயான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவாதம் நடத்த இந்த மாநாடு நடக்க உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து நேபாளம் புறப்பட்டுச் சென்றார். இதில் மற்ற நாட்டு தலைவர்களுடன் மோடி முக்கியமான உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.

அதேபோல் அங்குள்ள கோவில்களுக்கு மோடி செல்ல உள்ளார். மேலும் அங்குள்ள பசுபதிநாதர் கோவில் வளாகத்தில் நேபாள் பாரத் மைத்ரி தர்மசாலையை மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளனர்.

English summary
Modi in Nepal: Will discuss with Asian country leaders on BIMSTEC meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X