For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்ஸ் முதல் தீவிரவாதத்தை எதிர்ப்பது வரை கூட்டாக செயல்பட மோடி, ஒபாமா முடிவு

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: செவ்வாய்கிரக ஆய்வு மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவது ஆகியவற்றில் இந்தியா, அமெரிக்கா கூட்டாக செயல்படும் என்று பிரதமர் மோடி, அதிபர் ஒபாமா சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா கடந்த திங்கட்கிழமை இரவு வெள்ளை மாளிகையில் விருந்து அளித்தார். இதையடுத்து செவ்வாய்க்கிழமை அன்று மோடியும், ஒபாமாவும் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் விவரம் வருமாறு,

2 மணிநேரம்

2 மணிநேரம்

வெள்ளை மாளிகையில் ஒபாமாவும், மோடியும் சந்தித்து 2 மணிநேரமாக பேசினார்கள்.

தீவிரவாதம்

தீவிரவாதம்

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உள்ளிட்ட உதவிகள் கிடைப்பதை தடுக்க இருநாடுகளும் சேர்ந்து செயல்படும் என்று அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அல் கொய்தா

அல் கொய்தா

அல் கொய்தா, லஷ்கர் இ தொய்பா, ஹக்கானி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை எதிர்த்து இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக போராட உள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

பாதுகாப்பு, பொருளாதாரம், விண்வெளி, அணு ஆயுத ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மோடியும், ஒபாமாவும் பேசியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த மாற்றத்திற்கு இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து ஆதரவாக இருக்கும்.

அமெரிக்க நிறுவனங்கள்

அமெரிக்க நிறுவனங்கள்

பாதுகாப்பு துறையில் வந்து முதலீடு செய்யுமாறு மோடி அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டிகள்

ஸ்மார்ட் சிட்டிகள்

இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்கள், அலகாபாத், அஜ்மீர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக்க அமெரிக்கா உதவி செய்ய உள்ளது.

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளன.

அடுத்த கட்டம்

அடுத்த கட்டம்

இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை புதிய கட்டங்களுக்கு கொண்டு செல்ல மோடியும், ஒபாமாவும் உறுதி எடுத்துள்ளனர்.

இம்பிரஸ்ட்

இம்பிரஸ்ட்

எங்கள் சந்திப்பின்போது பிரதமர் இந்தியாவில் உள்ள ஏழைகள், பொருளாதாரம், நாட்டை முன்னேற்றுவது பற்றி பேசியதை பார்த்து வியந்தேன். திங்கட்கிழமை இரவு மோடி பெரும்பாலும் பொருளாதாரம் பற்றியே பேசினார் என்றார் ஒபாமா.

கிளம்பினார்

கிளம்பினார்

5 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி இந்தியாவுக்கு கிளம்பினார்.

கெர்ரி

கெர்ரி

நாங்கள் மோடிக்கு அளித்த வரவேற்பை மேடிசன் ஸ்கொயர் கார்டனில் அவருக்கு கிடைத்த ராக்ஸ்டார் வரவேற்புடன் ஒப்பிட முடியாது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி தெரிவித்தார்.

English summary
Furthering Indo-US cooperation on terrorism, Prime Minister Narendra Modi and President Barack Obama on Tuesday agreed to make "joint and concerted efforts" to dismantle safe havens for terror and criminal networks like LeT, JeM, D-company, al Qaeda and Haqqani network.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X