For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பான் கோவிலில் சிறுவனின் காதை பிடித்து இழுத்த பிரதமர் நரேந்திர மோடி

By Siva
Google Oneindia Tamil News

கியோட்டோ: ஜப்பானில் உள்ள கின்காகுஜி கோவிலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஒரு சிறுவனின் காதை பிடித்து இழுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த சனிக்கிழமை ஜப்பான் சென்றார். அவர் ஜப்பானின் பழமை வாய்ந்த நகரான கியோட்டோவில் தங்கினார். அந்த நகரில் உள்ள பிரபல கோவில்களுக்கு மோடி சென்றார்.

கோவில்களுக்கு மோடி தனியாக செல்லவில்லை.

ஷின்சோ

ஷின்சோ

மோடி கோவில் நகரமான கியோட்டோவை சுற்றிப் பார்த்தபோது அவருடன் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் உடன் இருந்தார்.

தோஜி கோவில்

தோஜி கோவில்

மோடி முதலில் புத்த கோவிலான தோஜி கோவிலுக்கு சென்றார். அங்கிருந்த புத்தர் சிலையை பார்த்த அவர் அது குறித்து அபேக்கு விளக்கியுள்ளார். பின்னர் அவர்கள் கின்காகுஜி கோவிலுக்கு சென்றனர்.

இரண்டாவது முறை

இரண்டாவது முறை

ஜப்பானில் இருந்தாலும் தான் தோஜி கோவிலுக்கு அடிக்கடி வருவது இல்லை என அபே மோடியிடம் தெரிவித்தார். மாணவர் பருவத்தை அடுத்து தற்போது இரண்டாவது முறையாக தோஜி கோவிலுக்கு வந்ததாக அபே தெரிவித்தார்.

வெள்ளை நிற ஆடை

வெள்ளை நிற ஆடை

கோவில்களுக்கு சென்றபோது மோடி வெள்ளை நிற குர்தா, பைஜாமா அணிந்திருந்தார். அவரது காலணிகள் கூட வெள்ளை நிறத்தில் இருந்தன. அமைதி, சமாதானத்தை எடுத்துரைக்கவே அவர் வெள்ளை நிற ஆடை அணிந்துள்ளார்.

சிறுவன்

சிறுவன்

கின்காகுஜி கோவிலுக்கு சென்ற மோடி அங்கு ஒரு ஆப்பிரிக்க சிறுவனின் காதை பிடித்து இழுத்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

English summary
PM Narendra Modi pulled the ears of a child when he visited Kinkakuji temple in Japan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X