For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென் கொரியா சென்றார் மோடி - சியோல் போர் நினைவிடத்தில் அஞ்சலி

Google Oneindia Tamil News

சியோல்: மூன்று நாடுகள் பயணத்தின் இறுதியாக மங்கோலியாவில் இருந்து புறப்பட்டு தென்கொரியா சென்றுள்ளார் பிரதமர் மோடி.

கடந்த 14ம் தேதி இந்தியாவில் இருந்து மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் கிளம்பினார் பிரதமர் மோடி. முதலில் சீனா சென்ற மோடி, பின்னர் அங்கிருந்து மங்கோலியா சென்றார். அதனைத் தொடர்ந்து மங்கோலியாவில் இருந்து புறப்பட்ட மோடி, இன்று காலை தென்கொரியா சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. தென்கொரியாவில் வசிக்கும் இந்தியர்கள் மோடியை நேரில் காண குவிந்திருந்தனர்.

Modi in Seoul

பின்னர் சியோலில் உள்ள தேசிய நினைவிடம் மற்றும் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தென்கொரிய அதிபரையும் மோடி சந்திக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து தனது மூன்று நாடுகள் பயணத்தை முடித்துவிட்டு மோடி இந்தியா திரும்புகிறார்.

English summary
Prime Minister Narendra Modi has arrived in South Korea this morning on the last leg of his three-nation tour. His discussions with the South Korean leadership will be focused on boosting economic and trade cooperation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X