For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பானில் குவிந்துள்ள முக்கிய உலக தலைவர்கள்.. அனைவரையும் சந்தித்து பேச்சு நடத்தும் மோடி

Google Oneindia Tamil News

ஒசாகா: ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டின் முதல் நாளான இன்று, பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து பேசினார்.

14-வது ஜி20 மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெறுகிறது. உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளை உள்ளடக்கியதே ஜி20 அமைப்பாகும். Group of Twenty என்பதையே சுருக்கமாக G-20 என அழைக்கிறோம் .

Modi to hold talks with all major world leaders in Japan

இன்று துவங்கியுள்ள இந்த மாநாடு நாளையும் நடைபெறுகிறது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார். வர்த்தகம், பிராந்திய அரசியல் விவகாரங்கள், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது

ஜப்பான் சென்ற மோடி இன்று காலை முதலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை தனியாக சந்தித்து பேசினார் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்துஆலோசிக்கப்பட்டது இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட மோடி தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான வழிகள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.

அமெரிக்காவுடனான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் ஆழப்படுத்த இந்தியா உறுதியுடன் உள்ளது என கூறியிருந்தார்

ட்ரம்புடனான தனி சந்திப்பிற்கு பின்னர் ஜப்பான், இந்தியா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளிடையே JAI கூட்டம் நடைபெற்றது இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சா அபே ஆகியோர் பங்கேற்று பேச்சு நடத்தினர். இந்த கூட்டத்திற்கு முன் அமெரிக்க அதிபரை ட்ரம்பை, பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசினார்.

அமெரிக்கா - ஜப்பான் - இந்தியா இடையேயான பேச்சுவார்த்தை பற்றி ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்தும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்தும் நாங்கள் விரிவான விவாதங்களை மேற்கொண்டோம் என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் சந்திப்பு மாநாட்டின் இடையே நிகழ்ந்தது.

இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி பிரிக்ஸ் தலைவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. எரிசக்தி மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கான அணுகலின் முக்கியத்துவம் பற்றிய தனது எண்ணங்களை பிரிக்ஸ் தலைவர்களுடன் பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார் மேலும் , உலக வர்த்தக அமைப்பின் வழிமுறைகளை வலிமையாக்குவது குறித்தும் தீவிரவாத சக்திகளை அகற்ற நெருக்கமான ஒத்துழைப்பு ஏற்படுத்தி கொள்ளுவது குறித்தும் பிரிக்ஸ் தலைவர்களுடன் ஆலோசித்துள்ளார் பிரதமர்

பிரிக்ஸ் தலைவர்களுடனான சந்திப்பிற்கு பின்னர் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உடன் மோடி இருதரப்பு பேச்சு நடத்தினார்

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி இந்தியா -சவுதி அரேபியாவிற்கும் இடையிலான முழு அளவிலான உறவுகள் குறித்து மதிப்பாய்வு செய்தோம். சவுதியுடனான இன்றைய பேச்சுக்கள் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு பெரும் பலத்தை அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பின்னர் தென் கொரிய அதிபருடன் சந்திப்பு நடத்தினார் மோடி இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி எனது நல்ல நண்பரான ஜனாதிபதி மூன் ஜே-இன் அவர்களை சந்திப்பது எப்போதும் சிறப்பானது. இந்தியா - கொரியா குடியரசிற்கும் இடையிலான நட்பை மேலும் வளர்ப்பதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இன்று, வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் மக்களிடமிருந்து மக்கள் உறவை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளைப் பற்றி பேசினோம் என பதிவிட்டுள்ளார்

மாநாடு முறைப்படி தொடங்கிய பின் ரஷ்யா - சீனா - இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சில் இந்தியா சார்பில் மோடி பங்கேற்றார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி நமது 3 நாடுகளுக்கு இடையில் பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பதற்கும், நமது நாடு எதிர்கொள்ளும் சவால்களைத் தணிப்பதற்கும், குறிப்பாக பயங்கரவாதம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்தும் விவாதிப்பதற்கான ஒரு சிறந்த கூட்டமாக இது நடைபெற்றது என குறிப்பிட்டுள்ளார்

English summary
Prime Minister Narendra Modi, who is in Japan to attend the G20 summit, spoke to various world leaders today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X