For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாலத்தீவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தது... நாளை வெளியாகிறது தேர்தல் முடிவு

Google Oneindia Tamil News

மாலி: மாலத்தீவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முன்னாள் அதிபர் முகமது நஷீத் மீண்டும் அதிபராக பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக வாக்குபதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மாலத்தீவில், 19-வது நாடாளுமன்றத்தைத் தேர்தல் இன்று நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி, காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, அமைதியான முறையில் நடைபெற்றது. இதற்காக, 500 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

Mohammad Nasheed will rule again In Maldives, Exit poll

மாலத்தீவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ள திருவனந்தபுரத்திலும் ஒரு வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்றே வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.

ஊரே எச். ராஜாவை விமர்சித்தாலும்... பிரேமலதா மட்டும் எப்படி பாராட்டி பேசியிருக்கிறார் பாருங்க! ஊரே எச். ராஜாவை விமர்சித்தாலும்... பிரேமலதா மட்டும் எப்படி பாராட்டி பேசியிருக்கிறார் பாருங்க!

தேர்தல் முடிவுகள் நாளை காலை முதல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 87 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வுசெய்வதற்கான இந்தத் தேர்தலில், முன்னாள் அதிபர் முகமது நஷீத், நாடாளுமன்ற சபாநாயகர் காசிம் இப்ராகிம் உட்பட 386 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, நஷீத் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயகக் கட்சிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு முற்போக்குக் கட்சி மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதில் முன்னாள் அதிபரான, முகமது நஷீத் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளதாக வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

English summary
Exit poll: Maldives former president Mohammad Nasheed will rule again In Maldives
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X