For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொலைந்த பொருட்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் 10% சன்மானம்: துபாயில் புதிய சட்டம்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: தொலைந்த பொருட்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு அந்த பொருளின் மதிப்பில் 10 சதவிகிதம் சன்மானமாக வழங்கும் புதிய சட்டம் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொலைந்த பொருட்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு அந்த பொருளின் மதிப்பில் 10 சதவிகிதம் சன்மானமாக அளிக்க வேண்டும் என்று துபாய் மன்னரும், துணை ஜனாதிபதி மற்றும் பிரதமராக உள்ள ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளார். சன்மான வரம்பு 50 ஆயிரம் திர்ஹாம்கள் ஆகும். கண்டுபிடித்த பொருளை அந்த நபர் 48 மணிநேரத்திற்குள் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Mohammed issues law: Finders of lost items in Dubai to get 10% reward

மன்னர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் 2015 ஆண்டின் சட்டப்பிரிவு 5இன் கீழ் இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

சட்டப்பிரிவு 2ன் படி சட்டப்பூர்வமாக சம்பாதித்து துபாயின் எல்லைக்குள் பொருட்கள் அல்லது பணத்தை தொலைத்தால் அதை கண்டுபிடித்து அவற்றை 48 மணிநேரத்திற்குள் போலீசாரிடம் ஒப்படைப்பவர்களுக்கு 10 சதவிகிதம் சன்மானம் அளிக்கப்பட வேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொலைந்த பொருட்களின் விபரத்தை போலீசார் வெளியிடுவார்கள். தொலைந்த பொருட்களை பெறவும், அதை பாதுகாப்பதும், விசாரணை மேற்கொள்வதும் போலீசின் கடமை. ஒரு வருடதிற்குள் உரிமையாளர் பொருட்களை திரும்ப பெற வேண்டும்.

இந்த சட்டம் பொதுமக்கள் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்ள உதவும். வருகிற 2020ம் ஆண்டில் துபாயில் நடைபெறும் 2020 எக்ஸ்போ கண்காட்சிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. துபாயில் வசித்து வருபவர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த சட்டம் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
Dubai ruler Sheikh Mohammed bin Rashid Al Maktoum has introduced a new law according to which people who find out lost property should be given a 10% reward.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X