For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரேசில் கால்பந்து வீரர்களுடன் நொறுங்கிய விமானம்.. ரேடாரில் பதிவான கடைசி தருணங்கள் இதோ! #Colombia

By Veera Kumar
Google Oneindia Tamil News

ரியோநெக்ரோ: பிரேசில் நாட்டின் சபெகோன்சே உள்ளூர் கிளப் கால்பந்தாட்ட அணி வீரர்கள் உட்பட 72 பேர் இன்று பொலிவியாவிலிருந்து, கொலம்பியாவின் ரியோநெக்ரோ நகருக்கு விமானத்தில் பயணித்தனர்.

இந்நிலையில், கொலம்பிய நேரப்படி இரவு 10.15 மணியளவில் அந்த நாட்டு வான் எல்லையில் வைத்து அந்த விமானம் நொறுங்கி விழுந்தது. சம்பவ இடத்திலிருந்து 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Moment where radar contact is lost with the Brazil aircraft

விமானங்களின் செயல்பாட்டை அனைத்து நாட்டு விமான துறைகளுமே ரேடார் மூலம் கண்காணிப்பது வழக்கம். அதேபோல, பிரேசில் வீரர்கள் பயணித்த விமானமும், கொலம்பியா வான் எல்லைக்குள் வந்ததும், அந்த நாட்டு ரேடார்களால் கண்காணிக்கப்பட்டன.

கொலம்பியா எல்லைக்குள் விமானம் திடீரென மாயமாகியுள்ளது. இந்த தருணம், ரேடாரில் பதிவாகியுள்ளது. இதுகுறித்த குட்டி வீடியோ ஒன்று டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது. அதை நீங்களும் பாருங்கள்.

மாயமான விமானம் மட்டும் குறியிட்டு காட்டப்பட்டுள்ளது.

English summary
Moment where radar contact is lost with the aircraft that transported the Chapecoense team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X