For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீசை தாடி வரைந்து மோனாலிசாவை "மேன்"லிசாவாக மாற்றிய ஓவியர்...50 கோடிக்கு விற்கப்பட்ட ஓவியம்!

By Shyamsundar
Google Oneindia Tamil News

பாரிஸ்: பிரான்சின் பாரிஸில் மோனலிசா ஓவியத்தின் பிரதி ஒன்றிற்கு மீசை தாடி வரைந்து அதை 50 கோடிக்கு விற்பனை செய்துள்ளார் ஓர் ஓவியர். மிகவும் வைரலான இந்த ஓவியத்தை வாங்குவதற்கு பல பேர் போட்டியிட்டதை அடுத்து கடைசியில் இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதை வரைந்தவரின் பெயர் மார்ஷல் டுச்சாம்ப் ஆகும்.

உலகில் மிகவும் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்று மோனலிசா ஓவியம். லியானார்டோ டாவின்சி வரைந்த இந்த ஓவியம் இன்றளவும் உலகில் மாஸ்டர் பீஸ் ஓவியங்களில் ஒன்றாக இருக்கிறது. உலகில் நிறைய நாடுகளில் ஓவியர்கள் இதேபோன்ற மோனாலிசாவை வரைந்து அதை விற்று வருகிறார்கள். இணையத்திலும் வகைவகையான நிறைய மோனலிசா ஓவியங்கள் காணக்கிடைக்கின்றன.

Mona Lisa painting with beard and moustache has sold for 50 crore !

இந்த நிலையில் பிரான்சின் பாரிஸை சேர்ந்த மார்ஷல் டுச்சாம்ப் என்ற ஓவியர் இதே மோனலிசா ஓவியத்தை அப்படியே அச்சு அசலாக வரைந்துள்ளார். ஆனால் மோனாலிசாவை அப்படியே வரைந்ததோடு மட்டும் இல்லாமல் அதில் மீசையும், தாடியும் வரைந்து இருக்கிறார். இதன்காரணமாக இந்த ஓவியம் மிகவும் வித்தியாசமாக தெரிந்திருக்கிறது.

அவர் வரைந்த இந்த ஓவியத்தை பிரான்ஸின் ஓவியக் கண்காட்சியில் வைத்திருக்கிறார். மேலும் ஓவியத்திற்கு "அவள் அழகாக இருக்கிறாள்" என பெயரிட்டு இருக்கிறார். இந்த ஓவியத்திற்கு விலையாக இந்திய மதிப்பில் 40 கோடி நிர்ணயம் செய்து இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்த ஓவியம் ஒரே நாளில் உலக அளவில் வைரல் ஆனது. நிறைய பேர் இந்த ஓவியத்தை வாங்க முயற்சித்தனர். இதையடுத்து கடைசியாக 50 கோடி ரூபாய்க்கு இந்த ஓவியம் விற்கப்பட்டது. இந்த ஓவியத்தின் புகழ் காரணமாக இவர் வரைந்த மற்ற ஓவியங்களும் அதிக விலையில் விற்பனை ஆனது.

English summary
Leonardo Da Vinci's master piece "Mona Lisa" got viral again.A artist in france has pencilled a beard and moustache on copy of mona lisa painting.it has sold for 50 crore rupees in Paris.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X