For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரங்கு எடுத்த செல்ஃபி காப்புரிமை குரங்குக்கா, கேமரா உரிமையாளருக்கா? அமெரிக்க கோர்ட் 'நச்' தீர்ப்பு

குரங்கு எடுத்த செல்பி புகைப்படத்தை அந்த கேமராவின் உரிமையாளர் பயன்படுத்த கூடாது என்று பீட்டா தொடுத்து இருந்த வழக்கில் தற்போது கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    குரங்கு எடுத்த செல்ஃபி காப்புரிமை குரங்குக்கா, கேமரா உரிமையாளருக்கா?

    கலிபோர்னியா: குரங்கு எடுத்த செல்பி புகைப்படத்தை அந்த கேமராவின் உரிமையாளர் பயன்படுத்த கூடாது என்று பீட்டா தொடுத்து இருந்த வழக்கில் தற்போது கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

    அதன்படி குரங்கு தனக்கு தானே சுயமாக புகைப்படம் எடுத்தாலும், அதனுடைய காப்புரிமையை அந்த குரங்கு கோர முடியாது என்று கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கடந்த 3 வருடமாக நடந்த இந்த பிரச்சனையில் தற்போதுதான் தீர்வு கிடைத்து இருக்கிறது.

    இனி வரும் காலங்களில், உங்கள் கேமராவை பயன்படுத்தி ஏதாவது ஒரு விலங்கு புகைப்படம் எடுத்தால், அந்த புகைப்படத்திற்கு அந்த விலங்கோ, பீட்டா போன்ற விலங்குகள் நலவாரியமோ உரிமை கோர முடியாது.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    கடந்த 2011ல் இந்த பிரச்சனை தொடங்கியது. டேவிட் ஸ்லாட்டர் என்ற புகைப்படக்காரர் இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, காட்டில் இருந்த ''நருடோ'' என்ற குரங்கு ஒன்று அவர் கேமராவில் புகைப்படம் எடுத்துள்ளது. தரையில் இருந்த கேமராவை அந்த குரங்கே எடுத்து சிரித்த படி செல்பி எடுத்து இருக்கிறது. இந்த புகைப்படம் மிகவும் வைரல் ஆனது.

    பிரச்சனை

    பிரச்சனை

    இதை எல்லோரும் ரசித்துக் கொண்டு இருக்கும் போது, பீட்டா அமைப்பு மட்டும் இதற்கு எதிராக பேசியது. இந்த புகைப்படத்தை டேவிட் சுயமாக பயன்படுத்தி அந்த குரங்கை ஏமாற்றிவிட்டார். இந்த புகைப்படம் அந்த குரங்கு எடுத்தது, அந்த குரங்குதான் இந்த புகைப்படத்தை பயன்படுத்த முடியும் என்றது. இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்று கூறி கலிபோர்னியா நீதிமன்றத்தில் டேவிட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்தது.

    வழக்கு எதிராக சென்றது

    வழக்கு எதிராக சென்றது

    ஆனால் இந்த வழக்கு தொடக்கம் முதலே பீட்டா அமைப்பிற்கு எதிராக சென்றது. இதையடுத்து டேவிட் புதிய முடிவெடுத்து, இந்த புகைப்படம் மூலம் வரும் பணத்தில் 25 சதவிகிதத்தை குரங்குகளை பாதுகாக்கும் அமைப்பிற்கு கொடுத்துவிடுகிறேன் என்று குறிப்பிட்டார். இதையடுத்து பீட்டா வழக்கை வாபஸ் வாங்க முடிவெடுத்தது.

    நீதிமன்றம் தீர்ப்பு

    நீதிமன்றம் தீர்ப்பு

    ஆனால் முதற்முறையாக கலிபோர்னியா நீதிமன்றம், பீட்டா அமைப்பை வழக்கை வாபஸ் பெற விடாமல் செய்து, பின் அவர்களை கண்டிக்கவும் செய்துள்ளது. இதில் பீட்டா மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக கண்டித்து இருக்கிறது. அதோடு, அந்த குரங்கு எடுத்த போட்டோவிற்கு, அந்த குரங்கு காப்புரிமை கோர முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. குரங்கு என்பதால், அதற்கு இவ்வளவு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாக பீட்டா கூறியுள்ளது.

    English summary
    A court in the US ruled on Monday, April 23, that a monkey who took a selfie on a wildlife photographer's camera doesn't own its copyright, drawing a line in an issue which continued to be a sensation on the internet for quite a while, AFP reported.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X