For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட்ட சோம்பேறிகள் 5 பேரும்.. அவர்களுக்காக ஒரு ஒலிம்பிக்ஸும்...!

Google Oneindia Tamil News

போட்கோரிகா, மான்டிநீக்ரோ: ஐந்து சோம்பேறிகள் பங்கேற்கும் ஒரு ஒலிம்பிக் போட்டி நடக்கிறது.. உங்களுக்கு ஏதாவது தெரியுமா... தெரிஞ்சுக்கோங்க..!

இந்த ஒலிம்பிக் போட்டிக்குப் பெயர் லேஸி ஒலிம்பிக்ஸ்.. அதாவது சோம்பேறி ஒலிம்பிக்ஸ். மான்டிநீக்ரோ நாட்டில் உள்ள பிரெஸ்னா என்ற கிராமத்தில்தான் இந்த கூத்து நடக்கிறது.

செர்பியா, போஸ்னியா - ஹெர்ஸகோவினா மற்றும் மான்டிநீக்ரோ நாடுகளைச் சேர்ந்த ஐந்து பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர். உலகிலேயே மிகவும் சோம்பேறிகள் என்ற பட்டத்திற்காக இவர்கள் போட்டியில் குதித்துள்ளனராம்.

அட்ட சோம்பேறிகளுக்காக

அட்ட சோம்பேறிகளுக்காக

வருடா வருடம் இந்தப் போட்டியை கடமையாக நடத்துகிறார்கள். இதில் மிகவும் சோம்பேறி என்ற பட்டத்தைப் பெறும் நபருக்கு 332 டாலர் பரிசாக அளிக்கப்படுமாம். போட்டிக்கான விதிமுறைக் கேட்டால் அசந்து போய் விடுவீர்கள். கேளுங்க அந்தக் கூத்தை...

எழுந்து நிற்கக் கூடாது

எழுந்து நிற்கக் கூடாது

போட்டியாளர்கள் யாரும் எழுந்து நிற்கக் கூடாது. டாய்லெட்டுக்குப் போகக் கூடாது. எதுவாக இருந்தாலும் தவழ்ந்தபடியோ, உட்கார்ந்து ஜம்ப் செய்தபடியோதான் போக வேண்டும்.

தம் அடிக்கலாம், குடிக்கலாம்

தம் அடிக்கலாம், குடிக்கலாம்

தம் அடிக்கலாம், குடிக்கலாம், போனில் பேசலாம், புத்தகம் படிக்கலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எழுந்து மட்டும் நிற்கக் கூடாது.

37 மணி நேரம் இப்படியே

37 மணி நேரம் இப்படியே

37 மணி நேரம் இதேபோல படுத்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவரான மார்க்கோ ஜுரோவிக் இந்த முறையும் போட்டிக்கு வந்துள்ளார்.

டைனிங் ஹால்தான் கிரவுண்டு

டைனிங் ஹால்தான் கிரவுண்டு

வழக்கமாக இதை அவுட்டோரில்தான் நடத்துவார்கள். இந்த முறை வெளியில் வானிலை மோசமாக இருப்பதால் வீட்டுக்குள் மாற்றி விட்டனர். வீட்டு டைனிங் ஹாலில்தான் போட்டியாளர்கள் படுத்துக் கிடக்கிறார்கள்.

பேசிக்கலி பெரிய சோம்பேறிங்க பாஸ்

பேசிக்கலி பெரிய சோம்பேறிங்க பாஸ்

இந்தப் போட்டிக்கு நடுவராக இருப்பவர் இவிகா டிரசோவிக். இதுகுறித்து அவர் கூறுகையில் மான்டிநீக்ரோ மக்கள் பேசிக்கலி பெரிய சோம்பேறிகள். எனவேதான் இந்தப் போட்டியை நடத்தும் யோசினை வந்தது என்றார்.

இலக்கியத்திலும் இருக்காமே

இலக்கியத்திலும் இருக்காமே

மான்டிநீக்ரோ மக்கள் உண்மையிலேயே பெரிய சோம்பேறிகள்தானாம். அதுகுறித்து அவர்களது நாட்டு இலக்கியங்களிலும் கூட நிறைய இடம் பெற்றிருக்கிறதாம்...!

English summary
The five laziest contestants from Serbia, Bosnia and Herzegovina and Montenegro are competing in the 'Lazy Olympics' in Brezna village, up in the Montenegrin mountains on Monday. Self-confessed lazy people from the Balkan region gather at this annual event to compete for the title "laziest person" and €300 ($332) prize money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X