For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்த ஆண்டு நிலாவில் இருந்தும் ஹலோ ஹலோ பேசலாம்!

2019ல் நிலாவில் இருந்து போனில் பேசலாம்!

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    சந்திரகிரகணத்தின் பொது ஏலியன் கடந்து சென்றதா ? | Oneindia Tamil

    ஜெர்மனி : நிலாவில் இருந்தும் போன் பேசும் விதமாக முதன்முதலில் மொபைல் போன் நெட்வொர்க் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. வோடபோன், நோக்கியா, ஆடி உள்ளிட்ட 3 நிறுவனங்கள் இணைந்து இந்த ஸ்பேஸ் எக்ஸ் மிஷனை அறிமுகம் செய்கின்றன.

    பூமியில் மொபைல் தொழில்நுட்பம் 2ஜி, 3ஜியை கடந்து 4ஜி அலைக்கற்றை வரிசையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் நாம் யாரும் யோசித்தே பார்க்காத அளவிற்கு நிலவும் முதல் மொபைல் போன் நெட்வொர்க்கை பெறப்போகிறது.

    அடுத்த ஆண்டு நிலாவில் முதல் மொபைல் போன் நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மூன் மிஷனில் முதன்முதலில் தனியார் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் முதல் தனியார் திட்டம் இது.

    வோடபன் நிறுவனம் முயற்சி

    வோடபன் நிறுவனம் முயற்சி

    வோடபோன் ஜெர்மனி, நோக்கியா, ஆடி 3 நிறுவனங்களும் சேர்ந்து இந்த திட்டத்தை அறிவித்துள்ளன. லூனார் ஓவர் மெஷினை செயல்படுத்துவதற்காக 3 நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொழில்நுட்பம் உதவி நோக்கியா

    தொழில்நுட்பம் உதவி நோக்கியா

    நிலாவில் நாசா கால் பதித்த 50 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நோக்கியா நிறுவனத்தை தங்களின் தொழில்நுட்ப பங்குதாரராக நியமித்துள்ளதாக வோடபோன் கூறியுள்ளது. நோக்கியா ஸ்பேஸ் கிரேடு நெட்வொர்க்கை உருவாக்கும் என்றும் இதன் உடையானது ஒரு பை சர்க்கரையை விட குறைவானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பால்கான் 9 ராக்கெட் மூலம்

    பால்கான் 9 ராக்கெட் மூலம்

    பெர்லினை சேர்ந்த பிடிஅறிவியலாளர்கள் குழுவுடன் இணைந்து இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. 2019ல் கேப் கானவெரல்லில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் என்றும் வோடபோன் கூறியுள்ளது.

    அண்மையில் வெற்றிகரமாக ஏவியுள்ளது

    அண்மையில் வெற்றிகரமாக ஏவியுள்ளது

    ஸ்பேஸ் எக்ஸ் அண்மையில் பால்கான் 9ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஸ்டார்லிங்க் இன்டர்செட்டை செயற்கைகோள் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The moon will get its first mobile phone network next year.Vodafone, Nokia, Audi work together to launch mission using SpaceX
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X