For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனாவை விரட்ட தயார்... பல நாடுகளில்.. பல முனைகளில் ரெடியாகும் வாக்சின்!

Google Oneindia Tamil News

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைத்து தடுப்பு மருந்து பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது.

தடுப்பூசி யை கண்டுபிடித்தால்தான் கொரோனவை அடியோடு ஒழிக்க முடியும் என்ற நிலை இருப்பதால் வாக்சின் குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று 1500 பேருக்கும் கீழாக குறைவு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று 1500 பேருக்கும் கீழாக குறைவு

 ஆட்டிப்படைக்கும் கொரோனா

ஆட்டிப்படைக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. ஒரு சில நாடுகளில் குறைந்தாலும், பல நாடுகளின் இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னதான் நாம் சமூக இடைவெளி, தடுப்பு வழிமுறைகளை பின்பற்றினாலும் கொரோனவை கட்டுக்குள் வைக்க முடியுமே தவிர அதனை நிரந்தரமாக ஒழிக்க முடியாது.

 நாடுகள் போட்டி

நாடுகள் போட்டி

கொரோனவை இந்த பூமியில் இருந்து நிரந்தரமாக விரட்டியடிக்க ஒரே வழி தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான். இந்த பணியைத்தான் வளர்ந்த உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டு செய்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி உலகம் முழுவதும் 164 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.

 48 நிறுவனங்கள்

48 நிறுவனங்கள்

48 நிறுவனங்கள் தங்கள் தயாரித்த தடுப்பூசிகளை, மருந்துகளை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றன. இதில் 37 நிறுவனங்கள் 1 முதல் 3 கட்ட சோதனைகளிலும், 11 நிறுவனங்கள் 3 கட்ட பரிசோதனைகளில் உள்ளன. இந்த தடுப்பூசி கண்டுபிடிப்பு பந்தயத்தில் 3 நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.

 இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

ஃபைசர், பயோஎன்டெக், ஃபோசுன் பார்மா, மாடர்னா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் அஸ்ட்ராஜெனெகா ஆகியவை ஆகும். இந்த நிறுவனங்கள் தன்னார்வலர்களுக்கு தங்களது தடுப்பு மருந்தை பரிசோதித்து அவற்றில் வெற்றி கண்டு மருந்துகளின் உரிமம் பெறுவதற்காக காத்திருக்கின்றன. உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கினால் இந்த மருந்துகள் சந்தைக்கு வந்து விடும்.

 ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம்

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம்

ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்கள் தங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள் நோயாளிக்கு 95% பாதுகாப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனெகா தடுப்பு மருந்து 70 சதவீதம் பேருக்கு தொற்றை கட்டுப்படுத்த கூடியது என்று தெரிவித்துளளது. ஆனாலும் மற்ற இரண்டை விட ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பு மருந்துகள் விலை குறைவானவை என தெரிவித்துள்ளது.

 ஐசிஎம்ஆர் ஆர்வம்

ஐசிஎம்ஆர் ஆர்வம்

ஆக்ஸ்ஃபோர்ட்-அஸ்ட்ராஜெனெகா நிறுவனங்கள் இந்தியாவில் 3-வது கட்ட தடுப்பு மருந்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.ரஷ்யாவின் கமலேயா நிறுவன ஆய்வகம் இந்தியா உள்பட சில நாடுகளில் மூன்றாவது கட்ட பரிசோதனை நடத்தி வருகிறது. இந்தியாவின் ஐசிஎம்ஆர்-பாரத் டேக் பயோ நிறுவனம் தடுப்பு மருந்து தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. சீனாவின் சிநோவக் பயோ டேக் நிறுவனம் பிரேசில், துருக்கி, இந்தோனேசியாவில் பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் நோவோவெக்ஸ் நிறுவனம், சீனாவின் உகான் ஆய்வகம் மூன்றாவது கட்ட பரிசோதனையில் தீவிரமாக உள்ளன.

 புனேயில் மும்முரம்

புனேயில் மும்முரம்

இந்தியாவை பொறுத்த அளவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழுவுடன் இணைத்துள்ள புனேவில் உள்ள சீரம் நிறுவனம், அடுத்த நான்கு மாதங்களுக்குள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர தீவிரமாக பணியாற்றி வருகிறது. 400 முதல் 500 ரூபாய்க்குள் தடுப்பூசியை விற்பனை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. மாத தொடக்கத்தில் 70 வேக்சின் டோஸ்கள் பின்னர் படிப்படியாக 100 டோஸ்க்ளையும், தயாரிக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 இந்தியாதான் டாப்

இந்தியாதான் டாப்

வளர்ந்த நாடுகள் விரைவாக சோதனை மேற்கொண்டு தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர முயலும்.
இந்தியாதான் உலகிலேயே அதிக அளவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் 16 ஆய்வகபகுதிகளை அமைத்துளளது. ஐரோப்பாவில் இந்த உற்பத்தி ஆய்வகங்கள் 16னும், அமெரிக்காவில் 5ம் உள்ளன. மொத்ததில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 4-5 வேக்சின் டோஸ்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என கூறப்படுகிறது.

English summary
The world is actively involved in the development of vaccines for coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X