For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனித குல வரலாற்றிலேயே... இப்போதுதான் அதிக "அடிமைகள்" உள்ளனராம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மனித குல வரலாற்றிலேயே, இதுவரை இல்லாத அளவுக்கு இப்போதுதான் அதிக அளவில் அடிமைகள் உள்ளதாக அமெரிக்க ஆய்வு கட்டுரையாளர் பெஞ்சமின் ஸ்கின்னர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஹார்வார்ட் கென்னடி பள்ளியின் மனித உரிமைக் கொள்கைக்கான மையத்தில் இவர் பணியாற்றி வருகிறார். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2.7 கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளதாக இவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

மனித குல வரலாற்றில் இந்த அளவுக்கு இவ்வளவு அடிமைகள் இதுவரை இருந்ததில்லை என்றும் இப்போதுதான் அதிக அளவில் கொத்தடிமைகள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

சகலவிதமான மோசடிகளும்

சகலவிதமான மோசடிகளும்

இவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வேலை வாங்கப்படுகின்றனர். இவர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை. வன்முறைக்கும், பாலியல் பலாத்காரங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். கட்டாயத் திருமணம், ஆள் கடத்தல் என சகல மோசடிகளும் இவர்கள் மீது ஏவப்படுவதாக ஸ்கின்னர் கூறுகிறார்.

விதம் விதமான பெயர்கள்

விதம் விதமான பெயர்கள்

இவர்கள் அடிமைகள் என்ற பொதுப் பெயரில் இல்லாமல் போனாலும் கூட இவர்கள் அனைவருமே அடிமைகளாகவே உள்ளனர். பலர் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் ஸ்கின்னர் கூறுகிறார்.

இந்தியாவில்

இந்தியாவில்

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், தென் கிழக்கு ஆசிய நாடுகள், ருமேனியா, சூடான் ஆகிய நாடுகளில் பெரிய அளவில் அடிமைத்தனம் இன்னும்
உள்ளது.

அமெரிக்காவிலும்

அமெரிக்காவிலும்

அதேபோல சூடான், பிரேசில், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் உள்ளது. ஏன் அமெரிக்காவிலும் கூட இன்னும் அடிமைகள் உள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் ஸ்கின்னர்.

எத்தனையோ சட்டங்கள் வந்தும் கூட

எத்தனையோ சட்டங்கள் வந்தும் கூட

சர்வதேச அளவில் இதுவரை 12க்கும் மேற்பட்ட அடிமை ஒழிப்பு மாநாடுகள் நடந்து விட்டன. ஆனால் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது அதிக அளவிலான அடிமைகள் உலக நாடுகளில் உள்ளனர்.

போர் அடிமைகள்

போர் அடிமைகள்

பழங்காலத்தில் போரின்போது சிறை பிடிக்கப்படுவோர் அடிமைகளாக நடத்தப்பட்டனர். எகிப்து, பாபிலோன், பெர்சியா, கிரீஸ், இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா, ரோம் ஆகிய நாடுகளில் இவை அதிகம் இருந்தன.

ஜூலியஸ் சீசர் கொண்டு வந்த அடிமைகள்

ஜூலியஸ் சீசர் கொண்டு வந்த அடிமைகள்

ஜூலியஸ் சீசர், கால் நகரை வென்றபோது, அங்கிருந்த மக்களை அடிமைகளாக ரோம் நகருக்குக் கொண்டு வந்தார். அப்போதுதான் ஸ்லேவ் (அடிமை) என்ற வார்த்தையே முதல் முறையாக உருவானது. அவர் அடிமைகளைக் கொண்டு வந்த மக்கள் ஸ்லேவிக் இனத்தவர் ஆவர். அந்த பெயரிலிருந்துதான் அடிமை என்று பொருள்படும் ஸ்லேவ் என்ற பதம் உருவானது.

பாதிப் பேர் அடிமைகள்

பாதிப் பேர் அடிமைகள்

ஜூலியஸ் சீசர் காலத்தில் ரோம் நகரில் வசித்து வந்தவர்களில் பாதிப் பேர் அடிமைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்லேவ் என்ற வார்த்தைக்கு நிரந்தர வேலைக்காரர்கள் என்ற இன்னொரு பொருளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As per the report by an US author, Benjami Skinner, there are more slaves today than at any time in human history
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X