For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவில் திடீரென வேகம் காட்டும் கொரோனா... 20,000 பேர் தனிமை முகாமுக்கு மாற்றம்!

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா வைரஸ் திடீரென அதிகரித்து வருகிறது.

அங்குள்ள கச்செங் மாவட்டத்தில் உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னெச்சிரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சீனாவில் 242 நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு ஒருவர் இறந்து உள்ளார்.

அவசர நிலை பிரகடனம்

அவசர நிலை பிரகடனம்

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தில் உள்ள கச்செங் மாவட்டத்தில் உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னெச்சிரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொற்று நோய் தவிர்ப்பு

தொற்று நோய் தவிர்ப்பு

புதிய தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் வைரஸுடனும் இல்லாமலும் உள்ளவர்களிடையேயான தொடர்புகளிலிருந்து புதிய தொற்றுநோய்களைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அந்த நாட்டு ஊடகங்கள் தெரிகின்றன.

இரண்டாவது டோஸ்

இரண்டாவது டோஸ்

தலைநகர் பீஜிங் அருகே அமைந்துள்ள ஹூபே மாகாணத்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவினூடே மில்லியன் கணக்கில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

முதல் இறப்பு

முதல் இறப்பு

சுமார் 7.5 கோடி மக்கள் தொகை கொண்ட ஹூபே மாகாணம், சமீபத்தில் உருமாறியுள்ள புதிய வீரியம் மிக்க கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இது சீனாவில் 242 நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட முதல் உயிரிழப்பாகும்.

English summary
The corona virus is on the rise in China's Heilongjiang province.More than 20,000 civilians from 12 villages in the Kachcheng district have been relocated to isolated areas as a precautionary measure
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X