For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீறிப் பாய்ந்த ஏவுகணைகள்.. அமெரிக்க ராணுவத்தளம் மீது சரமாரி தாக்குதல்.. ஈராக்கில் போர் அச்சம்!

ஈராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவ படை தளம் மீது இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: ஈராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவ படை தளம் மீது இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

கடந்த சில வாரம் முன் அமெரிக்க டிரோன் தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குவாஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதல் போராக மாறலாம் என்று அஞ்சப்பட்டது. ஆனால் போக போக, இந்த தாக்குதல் அப்படியே நிறுத்தப்பட்டு, போர் அச்சம் குறைந்தது.

ஆனால் அவ்வப்போது

ஆனால் அவ்வப்போது

ஆனால் அவ்வப்போது ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஈரான் மூலமே இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. அமெரிக்கா விலகிச் சென்றாலும் ஈரான் கண்டிப்பாக அமெரிக்காவை தாக்கும் திட்டத்தில் இருக்கிறது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்த இரண்டு தாக்குதலிலும் எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை.

மீண்டும் இப்போது

மீண்டும் இப்போது

இந்த நிலையில் தற்போது மீண்டும் இப்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவ படை தளம் மீது இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. கிர்கிக் பகுதியில் இந்த ஏவுகணை தாக்குதல் நடந்தது. இதில் எத்தனை பேர் பலியானார்கள் என்று விவரம் வெளியாகவில்லை. மொத்தம் 6 ஏவுகணைகள் குறி வைத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

யார்?

யார்?

ஆனால் அமெரிக்கா படைத்தளம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. . ஈரான் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஈரான் அரசு சார்பாக யாரும், நாங்கள்தான் தாக்கினோம் என்று கூறவில்லை. இந்த தாக்குதலை ஈரான்தான் நடத்தியது என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் வெளியாகவில்லை.

காரணம்

காரணம்

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று ஈரான் கோரிக்கை வைத்து வருகிறது. அங்கிருந்த அமெரிக்க படைகளை வெளியேற்றினால்தான் தாக்குதல் நிற்கும் என்று ஈரான் கூறிவிட்டது. இதனால் இன்று தாக்குதல் நடந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதேபோல்,சமயத்தில் சுலைமானி பலியானதன் 40வது நாள் இரங்கல் நேற்று நடைபெற்றது. அதற்கான பழி வாங்கல் நிகழ்வாக இந்த தாக்குதல் இருக்கலாம் என்கிறார்கள்.

English summary
More than 6 Rocket attack hits Iraq base hosting US troops in North province.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X