For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இழப்புகளை சந்திப்பீர்கள்.. அதிர்ச்சியை தாங்க முடியாது.. இந்தியாவிற்கு சீனா எச்சரிக்கை.. என்ன திமிர்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியா பெரிய இழப்புகளை சந்திக்கும், இந்தியாவால் இதற்கு மேலும் அதிர்ச்சியை தாங்க முடியாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. முதல் முறையாக சீனா எல்லை பிரச்சனையில் இந்தியாவிற்கு எதிராக பேசி இருக்கிறது.

Recommended Video

    அமெரிக்க போராட்டத்தை கையில் எடுத்த சீனா

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பிரச்சனை மோசம் அடைந்து வருகிறது. இரண்டு நாட்டு படைகளும் எல்லையில் ராணுவத்தை குவித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இதனால் போர் வெடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    இந்த பிரச்சனையில் மத்தியசம் பேச விருப்பப்படுவதாக அதிபர் டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால் இதை சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுமே மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

     களமிறக்கப்பட்ட நவீன ஆயுதங்கள்.. இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள்.. சாட்டிலைட் ஆதாரம்! களமிறக்கப்பட்ட நவீன ஆயுதங்கள்.. இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள்.. சாட்டிலைட் ஆதாரம்!

    என்ன மறுப்பு

    என்ன மறுப்பு

    இந்த நிலையில் இந்தியாவிற்கும் சீனா தற்போது கடுமையான எச்சரிகைகளை விடுத்துள்ளது. அதில், சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான சண்டையில் சிலர் இந்தியாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்தியா அமெரிக்காவிற்கு ஆதரவு தர வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். இது போன்ற பேச்சுக்கள் தவறானது. இது போன்ற பேச்சுக்கள் இந்தியாவை தவறாக வழி நடத்தும்.

    இந்தியாவிற்கு எதிரானது

    இந்தியாவிற்கு எதிரானது

    இது போன்ற பேச்சுக்கள் இந்தியாவின் கொள்கைக்கு எதிரானது என்று நாங்கள் நம்புகிறோம். அமெரிக்காவுடன் சேர்ந்ததால் இந்தியாவிற்கு எதுவும் கிடைக்காது. இந்தியாவிற்கு பெரிய அளவில் இழப்புகள் தான் ஏற்படும். இதனால் பிரதமர் மோடியின் அரசு இந்த பிரச்னையை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் எதிர்கொள்ள வேண்டும். இந்தியா கவனமாக இருக்க வேண்டும்.

    சேர கூடாது

    சேர கூடாது

    அமெரிக்கா, சீனா பிரச்சனையில் இந்தியா தலையிட கூடாது. இந்தியா இப்படி தலையிட்டால், அது பிரச்சனையை பெரிதாக்கும். அதோடு இந்தியாவிற்கு சிக்கலாக முடியும். அமெரிக்காவின் மத்தியசம் இதில் தேவை இல்லை. சீனா , இந்தியா இடையிலான பிரச்சனையை நாம்தான் சரி செய்ய வேண்டும். நமக்கு அந்த பலம் இருக்கிறது. அமெரிக்காவை இதில் உள்ளே அனுமதிக்க கூடாது.

     அதிர்ச்சி தாங்க முடியாது

    அதிர்ச்சி தாங்க முடியாது

    இந்தியாவில் ஏற்கனவே பொருளாதாரம் சரிந்துள்ளது. இந்தியாவால் மேலும் அதிர்ச்சிகளை தாங்க முடியாது. அமெரிக்காவுடன் இந்தியா இணைவதை தவிர்க்க வேண்டும். இந்தியாவும் - சீனாவும் அண்டை நாடுகள். நாம் ராஜாங்க ரீதியாக பேசுவதை ஊக்குவிக்க வேண்டும் . அதை விடுத்து தேசிய கொள்கைக்கு எதிராக அண்டை நாடுகளை எதிர்க்க கூடாது, என்று சீனா கூறியுள்ளது .

    English summary
    More to lose than to gain: China warns India in very strong words amid border tension.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X