For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொரொக்கோ : உணவு விநியோகத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசிலில் 15 பேர் பலி

By BBC News தமிழ்
|
மொரொக்கோ
BBC
மொரொக்கோ

மொரொக்கோவில் உணவு உதவி வழங்கப்படும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 15 பேர் பலியாகினர் மற்றும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஈசௌரியா மாகாணத்தின் சிதி பௌளாலம் என்ற நகரத்தில் இச்சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள தொண்டு நிறுவனம் ஒன்றால் இந்த உதவி வழங்கப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில், பெண்களின் சடலங்கள் சில தரையில் கிடந்தத்தைப் போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் காணப்பட்டன.

வெறும் 8,000 மக்களை மட்டுமே கொண்டது சிதி பௌளாலம் நகரம்.

அங்குள்ள உள்ளூர் சந்தையில் இந்த வருடாந்திர உணவு உதவி வழங்கல் நடைபெற, வழக்கத்திற்கு மாறாக அதிக மக்கள் கூட்டத்தை கவர்ந்ததாக இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்ததாக, ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க ஒருவருக்கொருவர் தள்ளிக் கொண்ட மக்கள், தடைகளை உடைத்தெரிந்தனர். காயமடைந்த மக்கள் மராகேஷில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

காயமடைந்தவர்களுக்கு அங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்ட அந்நாட்டின் அரசர் ஆறாம்ம மோ ஹமத் ,பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவமனை செலவு மற்றும் இறுதி சடங்குகளுக்கான செலவை தாம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார் என மொரொக்கோவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன், உணவு விநியோகத்திற்காக திறந்தவெளி சந்தையில் காத்திருந்த பெரும் கூட்டத்தை ஒரு பார்வையாளர் எடுத்த வீடியோ பதிவில் காண முடிந்தது.

கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து தெளிவான தகவல்கள் தெரியவரவில்லை.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
At least 15 people have been killed and five others wounded in a stampede in Morocco while food aid was distributed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X