For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா பரப்பும் மையமாகும் மாஸ்கோ.. ரஷ்யாவில் மொத்த பாதிப்பில் 50% இங்குதான்!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவில் நோய் பரப்பும் மையமாக அதன் தலைநகர் மாஸ்கோ மாறி வருகிறது. நாட்டில் கொரோனா பாதித்த மொத்த எண்ணிக்கையில் மாஸ்கோவில் 50 சதவீதம் உள்ளது.

Recommended Video

    கொரோனாவால் ரஷ்யாவில் ஒரே நாளில் திருப்பம்

    உலக நாடுகளை கொரோனா வைரஸ் பதம் பார்த்த நிலையில் ரஷ்யாவில் நுழையாமல் இருந்தது. இந்த நிலையில் ரஷ்யாவிலும் கொரோனா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நுழைந்துவிட்டது.

    கடந்த 3 நாட்களில் அங்கு கொரோனாவால் தினமும் 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று திங்கள்கிழமை மட்டும் 10,581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த எண்ணிக்கை 1,45,268 ஆனது. கடந்த வாரத்தில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனா, துருக்கி, ஈரான் வரிசையில் 7 ஆவது நாடாக ரஷ்யா உருவெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வடசென்னையில் இரவு நேரத்தில் அதிர்ச்சி.. வீட்டு வாசல் முன்பு ரூபாய் நோட்டுகள்.. கொரோனா பரப்ப சதி? வடசென்னையில் இரவு நேரத்தில் அதிர்ச்சி.. வீட்டு வாசல் முன்பு ரூபாய் நோட்டுகள்.. கொரோனா பரப்ப சதி?

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    அந்நாட்டு பிரதமர் மிகைல் மிசுஸ்டினுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அவருக்கு ரஷ்யாவின் உயரதிகாரி ஒருவர் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 76 பேர் பலியாகியுள்ளனர். இது வரை அங்கு பலியானோரின் எண்ணிக்கை 1,356 ஆக உள்ளது.

    தளர்வுகள்

    தளர்வுகள்

    மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புதிய நோய் பரப்பும் மையமாக ரஷ்யா உருவெடுத்து வருகிறது. பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புதிய கொரோனா பாதிப்புகளும், இறப்பு விகிதங்களும் குறைந்துள்ளதால் அங்கு விதிக்கப்பட்ட லாக்டவுனை தளர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்னதான் ரஷ்யாவில் அதிகளவில் பாதிப்புகள் இருந்தாலும் அங்கு இறப்பு விகிதம் என்பது இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவை காட்டிலும் குறைவாகவே உள்ளது.

    டெஸ்டிங்

    டெஸ்டிங்

    ரஷ்யாவின் எல்லையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அது போல் டெஸ்டிங் மற்றும் டிரேசிங் முறையை பரவலாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரஷ்யாவில் அதன் தலைநகர் மாஸ்கோ புதிய எபிசென்டராக மாறியுள்ளது. நாட்டில் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 50 சதவீதம் மாஸ்கோவில்தான்.

    75 ஆவது ஆண்டு விழா

    75 ஆவது ஆண்டு விழா

    ரஷ்யாவில் தற்போது மே மாதம் பொது விடுமுறையாகும். எனவே மக்கள் அரசின் உத்தரவுகளை மீற வேண்டாம் என்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் 75 ஆவது ஆண்டு விழாவை வெகு விமரிசையாக கொண்டாட அதிபர் விளாதிமிர் புதின் திட்டமிட்டிருந்தார்.

    ராணுவ போர் விமானங்கள்

    ராணுவ போர் விமானங்கள்

    இந்த விழாவில் உலக தலைவர்கள் முன்னிலையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பீரங்கிகள் அணிவகுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பால் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆண்டு விழாவின் போது ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் ராணுவ போர் விமானங்கள் பறக்கவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Moscow has emerged as the epicentre of the pandemic in russia with half of the total Corona cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X