For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்டை பார்த்தா பிரியாணி ஞாபகம் வந்தா அது இந்தியா.. ஆனால் விர்ஜீனியா வேற வெலல்!

அமெரிக்காவில் ஆடு யோகா பயிற்சிக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்காவில் பிரபலமாகும் ஆடு யோகா பயிற்சி-வீடியோ

    விர்ஜீனியா: நமக்கெல்லாம் பெரும்பாலும் ஆட்டை பார்த்தாலே பிரியாணி ஞாபகம்தான் வரும். ஆனால் அமெரிக்காவில் இந்த ஆடுகளை தங்கள் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதுதான் சிறப்பு.

    ஆடுகளை மக்கள் தங்கள் யோகா பயிற்சிக்கு பயன்படுத்தி கொள்கிறார்கள். அமெரிக்காவின் பல்வேறு மாகாணத்தில் இந்த ஆடு யோகா பயிற்சி என்பது ரொம்ப பிரபலமாகி வருகிறது.

     மனம் ஒருங்கிணையும்

    மனம் ஒருங்கிணையும்

    பொதுவாகவே யோகா, மனநலம், அமைதி சார்ந்த விஷயங்கள் இயற்கை சூழல் நிறைந்த பகுதிகளில்தான் கிடைக்கும் என்பதால் இதற்கான மையங்களும் நிசப்தம் நிறைந்த இடங்களில்தான் அமைக்கப்பட்டிருக்கும். அப்போதுதான் மனம் சிதறாமல் தியானத்தில் ஒருங்கிணையும் என்று சொல்லப்படும்.

     முதுகில் ஆட்டுக்குட்டிகள்

    முதுகில் ஆட்டுக்குட்டிகள்

    அப்படிப்பட்ட ஒரு இயற்கை சூழல் மிக்க பகுதிகளில் யோகா பயிற்சி செய்வோர்கள் ஆடுகளை பயன்படுத்துகிறார்கள். அதாவது யோகா செய்யும்போது நபரின் முதுகில் ஆடுகள் ஏறி உட்கார்ந்து கொள்ளுமாம். சவாரி செய்வது போல் முதுகில் ஏறி ஆடுகள் உட்காருவது புதுவிதமான அனுபவம் உள்ளதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.

     ஆட்டுப்பண்ணைகள்

    ஆட்டுப்பண்ணைகள்

    இதற்காகவே ஆட்டுப் பண்ணைகளிலிருந்து ஆடுகள் வரவழைக்கப்படுகிறதாம். ஆனால் இந்த ஆடு யோகா பயிற்சி 10-வயது மேற்பட்டவர்களுக்குத்தான் செய்யப்படுகிறது. அமைதியாக உட்காரும்போதும், படுக்கும்போதும், குனியும்போதும் ஆட்டுக்குட்டிகள் மேலே ஏறிக் கொண்டு நிற்பதாலும், சேட்டைகள் செய்வதாலும் மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக சொல்கிறார்கள் மக்கள்.

     பெரும் வரவேற்பு

    பெரும் வரவேற்பு

    யோகா செய்யும்போதும், ஆடுகள் இப்படி அவர்கள் மேல்ஏறிக் கொண்டு மிதி மிதியென மிதிப்பதை பார்க்கவே செம காமடியாக உள்ளது. இந்த ஆடு யோகாவிற்கு அவ்வளவு வரவேற்பு இருக்கிறதாம் அமெரிக்காவில்!!

    English summary
    Most Americans prefer the goat yoga practice
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X