For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க துப்பாக்கி சூடு.. 4 குழந்தைகளை கட்டியணைத்து காத்து, தனது உடலில் குண்டுகளை வாங்கி இறந்த பெண்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கொடூரமாக நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் கஷ்டப்பட்டு தன் குழந்தைகளை காப்பாற்றி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்க துப்பாக்கி சூடு.. 4 குழந்தைகளை கட்டியணைத்து காப்பாற்றி உயிரை விட்ட- வீடியோ

    டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் நேற்று முதல்நாள் தேவாலயத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். காரை தேவாலயத்திற்கு அருகில் நிறுத்திய அவர் வேகமாக இறங்கி சுட ஆரம்பித்தார் .

    இவர் நடத்திய மோசமான துப்பாக்கி சூட்டில் மொத்தம் 26 பேர் பலியாகினர். இதில் காயமடைந்த நிறைய பேர் இன்னும் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கின்றனர்.

    இந்த நிலையில் இந்த கொடூரமான துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் கஷ்டப்பட்டு தன் குழந்தைகளை காப்பாற்றி இருக்கிறார். குழந்தைகளை காப்பற்றிய தாய் மரணம் அடைந்த சம்பவம் எப்படி நடந்தது என அவரது குழந்தைகளே கூறியிருக்கின்றனர்.

     டெக்சாஸில் கொடூரமான தாக்குதல்

    டெக்சாஸில் கொடூரமான தாக்குதல்

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பாப்டிஸ்ட் தேவாலயம் ஒன்று உள்ளது. அந்த பகுதியில் அமைக்கப்பட்ட முதல் பாப்டிஸ்ட் தேவலாயமான அதில் நேற்று முதல் நாள் காலை பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வந்து கண்மூடித்தனமாக சுட்டார். தனது காரை தேவாலயத்திற்கு அருகில் நிறுத்திய அந்த நபர் வேகமாக காரில் இருந்து இறங்கி சுட ஆரம்பித்தார்.

     உயர்ந்த பலி எண்ணிக்கை

    உயர்ந்த பலி எண்ணிக்கை

    இந்த தாக்குதல் காரணமாக பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 26 பேர் பலியாகினர். பலியானவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். இதில் 20 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்த அனைவரும் மிகவும் மோசமான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

     சுட்டவர் தற்கொலை

    சுட்டவர் தற்கொலை

    இந்த நிலையில் இந்த கொடூரமான துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் தனது காருக்குள் மீண்டும் சென்று துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சரியாக ஒரு மணி நேரத்திற்கு பின் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் காரில் இறந்து கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரது துப்பாக்கியை எடுத்து தற்போது போலீசார் பரிசோதனை செய்து வருகின்றனர்.

     ஹீரோவான அம்மா

    ஹீரோவான அம்மா

    அந்த கொடூரமான சம்பவம் நடந்த சமயத்தில் அந்த சர்ச்சுக்கு பிராத்தனை செய்வதற்காக வந்து இருக்கிறார் 'ஜோன் வார்ட்'. தன்னுடைய நனவு குழந்தைகளுடன் அவர் அங்கு பிராத்தனை செய்யும் போது சரியாக அந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து இருக்கிறது. இதை பார்த்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் உடனடியாக அந்த பெண் ஓடிப்போய் தன் குழந்தைகளை பாதுகாப்பாக கட்டிப்பிடித்து காப்பாற்றி இருக்கிறார்.

     அம்மாவின் மரணத்தை பார்த்த மகன்

    அம்மாவின் மரணத்தை பார்த்த மகன்

    துப்பாக்கி குண்டுகள் இங்கும் அங்கும் பாயும் சமயத்தில் சரியாக எல்லாவற்றில் இருந்தும் குழந்தைகளை அவர் காப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் அவரது உடலில் பத்துக்கும் அதிகமாக குண்டுகள் சென்று இருக்கிறது. குழந்தைகள் நன்கு போரையும் கீழே படுக்க வைத்துவிட்டு அவர்கள் மேல் இவர் படுத்து இருக்கிறார். இதனால் அவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார்.

     குழந்தையின் உடல்நிலை முன்னேற்றம்

    குழந்தையின் உடல்நிலை முன்னேற்றம்

    இந்த நிலையில் அந்த சம்பவத்தில் ஒரே ஒரு குழந்தையின் உடலில் மட்டும் குண்டு பாய்ந்து இருக்கிறது. ஐந்து வயது நிரம்பிய 'ராயன்ட்' என்ற அந்த சிறுவன் இப்போது உடல் நிலை தேறிவருகிறான். 'ரிஹான்னா' என்ற பெண் குழந்தை இந்த சம்பவம் குறித்து கூறும் போது "என்னை இறுக்கமாக கட்டி பிடித்து குண்டுகள் என்னை தாக்காமல் என் அம்மா பார்த்துக் கொண்டார். எங்கள் நால்வரையும் சுற்றி அவர் நின்றார்'' என்று கூறியிருக்கிறார்.

    English summary
    A gunman entered a Baptist church in Texas and killed 26 people including the 14-year-old daughter of pastor on sunday. In this sudden shooting a mother became a shield to save her four children and died later.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X