For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீ கக்கும் எரிமலை மீது ஏறிநின்று வழிபடும் மக்கள்.. இந்தோனேசியாவில் வித்தியாசமான திருவிழா

இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் பரோமா எரிமலை மீது மக்கள் ஏறி நின்று காணிக்கைகளை சமர்ப்பித்து வித்தியாசமான சடங்கு செய்துள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பாலி: இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் பரோமா எரிமலை மீது மக்கள் ஏறி நின்று காணிக்கைகளை சமர்ப்பித்து வித்தியாசமான சடங்கு செய்துள்ளனர். இந்த திருவிழா வருடா வருடம் நடக்கிறது.

இந்தோனேசியா நாட்டில் உள்ள எரிமலைகளை பார்க்கவே சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வதுண்டு. ஒருவருடத்தில் சராசரியாக 30 மில்லியன் மக்கள் அந்த தீவை சுற்றி பார்க்க வருகிறார்கள்.

உள்ளூர்காரர்களையும், சுற்றுலா பயணிகளையும் சேர்த்து பல காலமாக மிரட்டி வருகிறது அங்கு இருக்கும் எரிமலைகள். இந்த நிலையில் அங்கு இருக்கும் மவுண்ட் பரோமா வித்தியாசமான காரணத்திற்காக மக்களை ஈர்த்து வருகிறது.

என்ன திருவிழா

என்ன திருவிழா

இந்த திருவிழா எல்லா வருடமும் ஜூலை மாதம் நடக்கும். பல்வேறு நாடுகளில் இருந்து இந்த சடங்கில் நம்பிக்கை உள்ள மக்கள் மவுண்ட் பரோமா எரிமலை மீது ஏறி காணிக்கை செலுத்துவார்கள். எரிமலை வெடிக்கும் நிலையில் இருக்கும் போது கூட அதன் மீது ஏறி வழிபாடு நடத்துவார்கள்.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்தோனேசியாவின் ரோரா ஆண்டங் என்ற மன்னன், வாரிசு இல்லாமல் கஷ்டப்பட்ட போது, கடவுளிடம் வேண்டி வாரிசு பெற்று இருக்கிறான். அப்போது இந்த எரிமலைக்கு காணிக்கை அளிப்பதாக சத்தியம் செய்துள்ளான். அதில் இருந்து மக்களும் இந்த எரிமலைக்கு காணிக்கை அளித்து வருகிறார்கள். முக்கியமாக அந்த பகுதியில் உள்ள டேன்ஜர் பழங்குடி மக்கள் காணிக்கை செலுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

என்ன செய்வார்கள்

என்ன செய்வார்கள்

இந்த எரிமலையில் பயிர்கள், பழங்கள், காசு என்று வித்தியாச வித்தியாசமான காணிக்கைகளை செலுத்துவார்கள். அதேபோல் ஆடு, மாடு, கோழி என்று உயிருள்ள பொருட்களையும் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதற்காக வெளிநாடுகளில் இருந்து கூட மக்கள் அந்த பகுதிக்கு வருகிறார்கள்.

இங்கும் கூட

இங்கும் கூட

அதேசமயம் இங்கு ஒரு வித்தியாசமான நிகழ்வும் நடக்கிறது. வறுமையில் இருக்கும் பக்கத்து கிராம மக்கள், அந்த எரிமலையில் விழும் பொருட்களை வித்தியாசமாக வீட்டிற்கு எடுத்து வருகிறார்கள். இதற்காக, பெரிய வலைகளை வைத்து காணிக்கை பொருட்களை உள்ளே விழுவதற்கு முன்பு அதை பிடித்து, எடுத்து செல்கிறார்கள். இதை எல்லாம் அவர்கள் உயிரை பணயம் வைத்து செய்கிறார்கள்.

English summary
Mount Baromo volcano festival: Thousands Climb top to offer rituals in the important day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X