For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிம்பொனி பாட்டு... மூட் லைட்டிங்... ஜாலியாக வளரும் கறிக்கோழிகள்.. அசத்தும் மலேசியர்!

Google Oneindia Tamil News

லண்டன்: லண்டனில் கேடு தரும் ஊட்டசத்துகள், வளர்ச்சி ஹார்மோன்கள் போன்றவற்றைக் கொடுக்காமல் மொஸார்ட்டின் சிம்போனி, இனிமையான லைட்டிங் மூலம் ஆரோக்கியமான கறிக்கோழிகளை உற்பத்தி செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார் மலேசியர் ஒருவர்.

லண்டனைச் சேர்ந்த மலேசியரான கீ ஷாங்கின் கோழி பண்ணை உலகளவில் மிகவும் பிரபலமானது.

தனது கோழிப்பண்ணையில் சுமார் 20 ஆயிரம் கோழிகளை வளர்த்து வருகிறார் கீ ஷாங்.

இயற்கை முறை வளர்ப்பு:

இயற்கை முறை வளர்ப்பு:

இதில் முக்கியமான விஷயம், கறிக்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கு கொடுக்கப்படும் ஊட்டசத்துகள், வேகமாக எடை அதிகரிக்க கொடுக்கப்படும் வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்கள் போன்றவற்றை கொடுக்காமல் இருப்பதுதான்.

சிம்பொனி இசைக் கோர்வைகள்:

சிம்பொனி இசைக் கோர்வைகள்:

இவைகளுக்கு மாற்றாக ஆஸ்திரிய இசை மேதை மொஸார்ட்டின் சிம்போனி இசை கோர்வைகளையும், இனிமையான மனநிலையை கொடுக்கும் நியான் ஒளி விளக்குகளையும் பயன்படுத்தி ஆரோக்கியமான கோழிகளை உருவாக்கி வருகிறார்.

 தொற்றுநோய் அபாயம்:

தொற்றுநோய் அபாயம்:

ஆன்டிபயாட்டிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுக்கப்படாததால் ஏற்படும் தொற்று நோய் அபாயத்தை தவிர்க்க பண்ணையை வெகு சுத்தமாக பராமரிக்கிறார்கள்.

பல நாடுகளுக்கு ஏற்றுமதி:

பல நாடுகளுக்கு ஏற்றுமதி:

இங்கு கோழிகளின் எச்சங்களில் கூட அதிக துர்நாற்றம் இல்லை என்பது தான் மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயம். இங்கு உற்பத்தி செய்யப்படும் கோழிகள் சிங்கப்பூர் உட்பட பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

English summary
In Kee Song's Malaysian poultry farm, 20,000 chickens rest on saw dust in the dimly lit barns, with feed and water laced with probiotics being automatically pumped into feeding pans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X