For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எண்ணெய் கப்பலில் சென்ற 22 இந்தியர்கள் நைஜீரியாவில் மாயம்.. கடற்கொள்ளையர்கள் காரணமா?

மும்பையை சேர்த்த எண்ணெய் கப்பல் ஒன்று நைஜீரியாவில் காணாமல் போய் இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கினியா: மும்பையை சேர்த்த எண்ணெய் கப்பல் ஒன்று நைஜீரியாவில் காணாமல் போய் இருக்கிறது. நேற்று இரவு இந்த கப்பல் காணாமல் போய் இருக்கிறது.

அந்த பகுதியில் கடற்கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கப்பல் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டு உள்ளது.

இந்த கப்பலில் 22 இந்தியர்கள் பயணித்து இருக்கிறார்கள். இவர்களின் நிலை என்ன என்று இப்போதுவரை தெரியவில்லை.

என்ன மாதிரியான கப்பல்

என்ன மாதிரியான கப்பல்

இந்த கப்பல் மும்பையில் இருக்கும் 'ஆங்கிலோ -ஈஸ்டர்ன்' கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமானது. அந்த கப்பல் 13,500 டன் கேஸ் எரிபொருளை சுமந்து சென்று இருக்கிறது. இதில் 22 இந்தியர்களும், சில வெளிநாட்டினரும் பயணித்துள்ளனர்.

காணாமல் போனது

காணாமல் போனது

இந்த கப்பல் நேற்று இரவு தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இன்று காலை செல்ல வேண்டிய கப்பல் காணாமல் போய் உள்ளது. அங்கு காலநிலை மிகவும் நன்றாக இருப்பதால் கப்பல் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மாயம்

மாயம்

இந்த கப்பலில் சென்ற 22 பேர் குறித்த தகவலும் தெரியவில்லை. 22 பேரின் குடும்பத்தினர் அந்த கப்பல் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இவர்கள் குறித்த செய்தி கிடைத்தவுடன் தகவல் தெரிவிக்கப்படும் என்று அந்த கப்பல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா உதவி கோரிக்கை

இந்தியா உதவி கோரிக்கை

இந்த நிலையில் இந்திய கடற்படை நைஜீரியாவிடம் உதவி கோரி இருக்கிறது. கினியா அரசும் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. தற்போது தீவிரமாக தேடுதல் பணி நடந்து வருகிறது. 12 மணிநேரம் ஆகியும் கப்பல் இருக்கும் இடம் தெரியவில்லை என்பதால் பதற்றம் நிலவுகிறது.

English summary
Mumbai oil ship with 22 Indians goes missing in West African coast yesterday. Indian navy seeks Nigeria's help.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X