For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லக்வி பாகிஸ்தானில் கைது

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட சாகியுர் ரெஹ்மான் லக்வி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. சுமார் 10க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதால் 166 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தினர் பொறுப்பேற்றனர்.

Mumbai terror attack master mind Lakhvi arrested

இந்த மும்பை தாக்குதல் உலகளவில் நடந்த பயங்கரவாதம் என ஐநா அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிகம் பேர் உயிரிழந்த தாக்குதல் சம்பவமாக இது திகழ்கிறது.

பஞ்சாபை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு துறையினரால் லக்வி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். அவர் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்கிறார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டார்.

கேரளாவில் ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவைக்கு தடையா? உண்மை என்னகேரளாவில் ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவைக்கு தடையா? உண்மை என்ன

இவர்தான் மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர் லக்வி. 6 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறையிலிருந்த லக்வி கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியே வந்தார். அனைத்து நாடுகளும் லக்வியின் பணத்தையும் சொத்துகளையும் முடக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

English summary
Mumbai terror attack master mind Lakhvi arrested in Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X