For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமான சிப்பந்தியை தொடர்ந்து பார்த்ததால் போலீசில் ஒப்படைக்கப்பட்ட 2 முஸ்லீம் பெண்கள்

By Siva
Google Oneindia Tamil News

பாஸ்டன்: அமெரிக்காவில் சிப்பந்தி பெண் ஒருவரை பார்த்துக் கொண்டே இருந்ததால் இரண்டு முஸ்லீம் பெண்கள் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்து ஜெட்ப்ளூ விமானம் ஒன்று பயணிகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றது. விமானத்தில் இருந்த இரண்டு முஸ்லீம் பெண்களை தன்னயே பார்த்துக் கொண்டிருந்தது தனக்கு பிடிக்கவில்லை என்று சிப்பந்தி பெண் ஒருவர் தனது சக சிப்பந்தியிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தரையிறங்கியவுடன் அந்த பெண்கள் இருக்கைகளை விட்டு எழக்கூடாது என்று சிப்பந்திகள் தெரிவித்தனர். பின்னர் போலீசார் வந்த பிறகு அவர்களுடன் அந்த பெண்கள் விமானத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த பெண்கள் அவர்கள் பாட்டுக்கு இருக்கைகளில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களைப் போய் இப்படி என்று ஒரு பயணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெட்ப்ளூ நிறுவனம் கூறுகையில்,

எங்கள் சிப்பந்திகள் பாதுகாப்பு முறைகளின்படியே நடந்துள்ளனர். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மற்றும் பொறுமையை பாராட்டுகிறோம். மேலும் அசவுகரியத்திற்கு வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.

English summary
In a shocking incident, two Muslim women were escorted off from a plane by police after a cabin crew member accused them of "staring" at her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X