For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக்., வங்கதேச முஸ்லீம்கள் எல்லாம் அடிப்படையில் இந்துக்கள்: பாக். பெண் ஆர்வலர் சர்ச்சை பேச்சு

By Siva
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம்களில் பெரும்பாலானவர்களின் முன்னோர்கள் இந்துக்கள் என்று அந்நாட்டைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலரான ஃபவ்சியா செய்யது. அவர் தொலைக்காட்சி சேனல் ஒன்று நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் அடிப்படையில் இந்துக்கள் தான். ஏனென்றால் அவர்களின் மூதாதையர்கள் இந்து மதத்தை பின்பற்றியவர்கள் ஆவர். அதில் சிலர் புத்த மதத்தை பின்பற்றியவர்கள்.

இஸ்லாமிய நாடுகளில் இருந்து வந்து தங்கள் நாட்டின் மீது படையெடுத்தவர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் நாம் என்று பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான முஸ்லீம்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல வெறும் கற்பனை. 99 சதவீத பாகிஸ்தானியர்களின் மூதாதையர்கள் இந்துக்கள் என்பது தெளிவான யாருக்கும் புரியும்.

இந்த உண்மையை ஏற்க பாகிஸ்தான் மக்கள் தயாராக இல்லை. ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டதன் மூலம் இந்நாட்டில் தீவிரவாதம் ஆதரிக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்தது என்றார்.

English summary
Fauzia Syed, a Pakistani activist told that muslims in Pakistan and Bangladesh are essentially Hindus as their ancestors were followers of hinduism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X