For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருத்தரிக்க பொருத்தமான காலத்தை அறிய உதவும் மென்பொருள்; பெண்களை கவர்ந்த தொழில்நுட்பம்

By BBC News தமிழ்
|

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் குழந்தை பெற்றெடுக்க திட்டமிட்டு கேத்தி பியாமன்ட் முயற்சிகள் மேற்கொண்டபோது, கருத்தரிப்பதற்கு மிக சிறந்த காலம் எது என்பதை அறிய, சந்தையில் கிடைத்த பல கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருள்களை ( செயலிகளை ) நாடினார்.

அவருடைய உடல் வெப்பத்தை ஒவ்வொரு நாளும் அளவிட்டு "ஃபெர்ட்டிலிட்டி ஆப்" என்ற மென்பொருளில் சேர்த்து வைத்தார். ஆனால். சீக்கிரமாகவே கருத்தரிப்பு எண்ணங்களில் முடங்கி போகிற ஒருவராக தான் மாறுவதை அப்போது அவர் உணர்ந்தார்.

"என்னுடைய மாதவிடாய் காலம் எவ்வாறு இருக்கிறது, என்னிடம் கரு முட்டை வெளிப்படும் காலத்தை சுட்டிக்காட்டுகின்ற உடல் வெப்பநிலையில் அதிகபட்ச அதிகரிப்பு காணப்படுகிறதா? என்பதை அந்த மென்பொருளிலுள்ள பகுப்பாய்வு பிரிவில் பார்வையிட்டு, நான் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டிருந்தேன்" என்கிறார் பகுதி நேர பிரதி எழுத்தாளர் 32 வயதான கேத்தி.

"எனது கரு முட்டை கருத்தரிக்க தயாராக இருப்பதாக அந்த மென்பொருள் கணிக்கின்ற காலத்தில் மட்டுமே குழந்தை கருத்தரிப்பதற்கு முயன்று வந்தோம்" என்று மேலும் அவர் கூறுகிறார்.

ஆனால் இவ்வாறு 6 மாதங்கள் "முயன்ற" பின்னரும், கேத்தி கருத்தரிக்கவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது.

திருமணம் முறிந்தால் மறுதுணை தேடுவது என் உரிமை: பெண்களின் மனநிலை மாற்றம்

மாதவிலக்கு காலத்தில் பெண்கள் தூய்மை இழக்கிறார்களா?

சில மாதங்களில் எங்களுடைய வாய்ப்பை முழுமையாக நாங்கள் தவற விட்டிருக்கலாம் என்று எண்ணுவதாக விளக்குகிற அவர், இதனை தேவைக்கு அதிகமாகவே முக்கியத்தவம் கொடுத்து செயல்பட்டதால் உருவான அழுத்தங்களால் எழுந்த மிகுந்த மன உளைச்சல் கருத்தரிக்க இயலாமல் செய்திருக்கலாம் அல்லது இந்த கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருள் துல்லியமான செயல்திறனற்றதாக இருந்திருக்கலாம் என்கிறார்.

தன்னுடைய நன்மைக்காக, இத்தகைய கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருட்களை பயன்படுத்தி குழந்தை கருத்தரிக்க செய்ய முயலுவதை விட்டுவிட தீர்மானித்த அடுத்த மாதமே அவர் கருவுற்றார்.

இத்தகைய மென்பொருட்கள் நிச்சயமாக ஒருவித நோக்கத்திற்கு உதவுகிறது என்று கூறுகின்ற அவர், ஆனால், அவை தான் எல்லாம்; அவற்றால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்றில்லை என குறிப்பிடுகிறார்.

கருத்தரிக்க உகந்த காலத்தை மென்பொருள் கணிக்குமா?

சில பெண்களுக்கு இந்த கருத்தரிப்பு காலக்கணிப்பு நிச்சயமாக உதவவே செய்கின்றது.

ஸ்வீடனில் கேட்ட போட்காஸ்ட் நிகழ்ச்சியில் இதுபற்றி கேள்விப்பட்ட பிறகு, 35 வயதான லண்டனை சேர்ந்த சாரா பிளைக்கிட், "நேச்சுரல் சைக்கிள்ஸ்" என்ற கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருளை பயன்படுத்தினார்.

இந்த மென்பொருளை பயன்படுத்துவோர் கருத்தரிக்கும் நிலையில் இருக்கின்றாரா? அல்லது கருத்தடைச் சாதனங்களை பயன்படுத்த வேண்டுமா? என்று உடல் வெப்பநிலையை கணக்கில் கொண்டு தீர்மானித்து இது பகுப்பாய்வு செய்கிறது.

"முன்பு நான் மாத்திரை சாப்பிட்டு வந்தேன். ஹார்மோன்கள் என்னை மிகவும் மோசமான நிலைக்கு உள்ளாக்கியது எனவே, இந்த மென்பொருள் பற்றி கேள்விப்பட்டபோது, இதனை முயற்சி செய்வதில் புத்திசாலித்தனம் எதுவும் தேவையில்லையே என்று உணர்ந்தேன்" என்கிறார் ஸ்வீடனில் பிறந்த பிளைக்கிட்.

முன்னாள் கணவனை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளும் முஸ்லிம் பெண்கள்

தொடக்கத்தில் இந்த மென்பொருளை கருத்தடைச் சாதனமாக பயன்படுத்திய அவர், கடந்த ஆண்டு தான் கருத்தரிக்க திட்டமிடுவதற்கு இந்த மென்பொருளை பயன்படுத்தி கொண்டார்.

"இந்த மென்பொருள் என்னுடைய கருத்தரிப்பு காலத்தை கணிப்பதற்கு நிச்சயமாக உதவியது. இதனை பயன்படுத்துவதும் எளிது. நானும் என்னுடைய கணவரும் உபசரிக்கும் விருந்தோம்பல் சேவை துறையில் பணியாற்றுவதால் எங்களுக்கு குறிப்பாக இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சில நாட்கள் நாங்கள் ஒருவரையொருவர் சந்திப்பதுகூட கிடையாது.

"இந்த மென்பொருள் மூலம் நாம் எப்போது குழந்தை கருத்தரிக்க முயல வேண்டும், ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்"

ஸ்வீடனில் தொடங்கப்பட்ட இந்த "நேச்சுரல் சைக்கிள்ஸ் ஆப்", கருத்தடைச் சாதனம் என்பதற்கான மருத்துவ அனுமதியை சமீபத்தில் வென்றிருக்கிறது.

பெண்களை குறிவைக்கும் தொழில்நுட்பம்

ஃபெம்டெக் என்று குறிப்பிடப்படும் பெண்களை இலக்கு வைத்து உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள், கருத்தடை மற்றும் மாதவிடாய் காலக்கணிப்பு மென்பொருட்கள் முதல் ஆபாச பொம்மைகள் மற்றும் மார்பக குழாய்கள் வரை அனைத்தையும் உள்ளடக்குகின்றன.

சமீபத்திய ஆண்டுகளில் இந்த சந்தை வளர்ந்து வருகிறது.

"ஃபெம்டெக் பொருட்களின் தயாரிப்பை தொடங்க முதலீடு செய்வதில் முக்கிய வளர்ச்சியை காண்கிறோம்" என்று சிபி இன்சைட்ஸ் தொழில்நுட்ப ஆய்வாளர் ஸோய் லியாவிட் கூறுகிறார்.

இது தொடர்பாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்கள் 2014 ஆம் ஆண்டு 20 என்பதில் இருந்து 2015 ஆம் ஆண்டு 40 ஆக உயர்ந்த்து. 2016 ஆம் ஆண்டு மொத்தம் 52 ஒப்பந்தங்களும், டாலர் மதிப்பில் மொத்தம் 540.5 மில்லியன் டாலர் என்ற மதிப்பிலும் உயர்ந்தது.

விந்தணு தரம் குறைவு; செயற்கை முறை கருத்தரிப்பில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கும் வருமா ?

2009 ஆம் ஆண்டில் இருந்து மொத்தம் 173 ஒப்பந்தங்களில் 1.26 பில்லியன் முதலீடு செய்யப்பட்டிருப்பதை தெரியவந்துள்ளது.

ஆனால், சில பெண்கள் இத்தகைய மென்பொருட்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்படலாம் என்ற கவலை இருக்கவே செய்கிறது.

பெண்கள் கருவுற உகந்த நிலையில் இருப்பதை உடனடியாக தெரிவிக்கும் அணியக்கூடிய காப்பு மற்றும் மென்பொருளை தயாரித்துள்ள ஒரு நிறுவனத்தின் இணை நிறுவனர் தான் லியே வோன் பிட்டர்.

ஆனால், கருத்தரிக்கும் வேளையை அறிவது என்பது தற்போதைய தெரிவில் ஒரு பெண்ணுக்கு பகுதி நேர வேலை என்ற நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

ஒரு நாளில் பலமுறை குச்சிகளில் சிறுநீர் கழிப்ப்த, ஒவ்வொரு நாளும் காலை எழுந்து, ஒரே நேரத்தில் உடல் வெப்பநிலையை பதிவு செய்வது அல்லது கழிவறைக்கு செல்கின்ற ஒவ்வொரு முறையும் கர்ப்பப்பை வாய் சளியை சோதித்து கொள்வது என பல வேலைகளை பெண்கள் செய்ய வேண்டியுள்ளது.

"இந்த பணிகள் தையும் செய்யாமல், இரவு மட்டும் அணிந்து கொள்ளக்கூடிய காப்பு ஒன்றை உருவாக்கி இருப்பதன் மூலம், பெண்களின் அழுத்தத்தையும், கருத்தரிப்பு காலம் பற்றி கவலைப்படுவதையும் குறைக்க உதவி இருப்பதாக உறுதியாக நம்புகிறோம்" என்று லியே வோன் பிட்டர் கூறகிறார்.

இத்தகைய பல மென்பொருட்கள் குழந்தை பெற்றுகொள்ள முயல்வோரை மட்டுமே இலக்கு வைப்பதில்லை.

"வாடகைத்தாய்கள் மீதான இந்திய அரசின் தடை ஏழைப்பெண்களை பாதிக்கும்"

பெர்லினை தலைமையிடமாக கொண்டு விளங்கும் "குளு" நிறுவனத்தின் இணை நிறுவனர் ஐடா டின், இந்த நிறுவனத்தின் மாதவிடாய் சுழற்சியை அறிவிக்கும் கருவி "பெண்களுக்கு அதிகாரம் வழங்கும்" முயற்சி என்று குறிப்பிடுகிறார்.

சிலருக்கு, தங்களுடைய உடலை பற்றிய உள்ளூர பார்வைகளை முதல்முறையாக பெறுகின்ற தருணமாக இது அமைகிறது. மக்கள் தங்களுடைய உடலை நன்றாக புரிந்து கொள்வதற்கு இந்த மென்பொருட்கள் உதவுகின்றன

குழந்தைகளை பெற்றெடுக்க அல்லது அடுத்த மாதவிடாய் காலத்தை அறிய இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இதே கருத்தை பல பெண்கள் ஒப்புக் கொள்வதாக தெரிகிறது. குளு நிறுவனம் உலகளவில் 5 மில்லியன் தீவிர பயன்பாட்டாளர்களை கொண்டு விளங்குகிறது.

ஆனால், ஐக்கிய ராஜ்ஜியத்தின் தேசிய சுகாதார மற்றும் சிறப்பு பராமரிப்பு நிறுவனம் (என்ஐசியி) இத்தகைய கருத்தரிப்பு காலக்கணிப்பு மென்பொருட்களை எச்சரிக்கையோடு பயன்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளது.

"நோயாளிகளுக்கும், பயன்பாட்டாளருக்கும் கருத்தரிப்பு தொடர்பாக பலன்கள் கிடைக்கும் என்று உறுதியளிக்கும் பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் மாதிரிகள் இன்று உள்ளன. அவை அனைத்தையும் சுகாதார பாரமரிப்பில் பயன்படுத்துவதற்கு முன்னர் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று தேசிய சுகாதார மற்றும் சிறப்பு பராமரிப்பு நிறுவனத்தின் சாட்சிய ஆதாரங்களின் இயக்குநர் அலெக்ஸியா டோனெல் கூறுகிறார்.

"எங்கெல்லாம் முடியுமோ, அங்கு பயன்பாட்டாளர்கள் பலன்கள் என்று சொல்லப்படுபவற்றை தனிப்பட்ட முறையில் மீளாய்வு செய்திட வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

இத்தகைய மென்பொருட்களின் செயல்திறனில் ஒரு சில லாப நோக்கமற்ற பாலுறவு சுகாதார நிறுவனங்களும், நிபுணர்களும் கவலைகளை தெரிவித்துள்ளன.

ஆனால் உலக அளவிலுள்ள மில்லியன் கணக்கான பெண்கள். இதனை முக்கிய கருத்தடை சாதனமாக, தங்களின் மாதவிடாய் சுழற்சிக் காலத்தை புரிந்துகொள்ள உதவும் வழிமுறையில் கருத்தரிப்புக்கு உதவும் கருவியாக இருப்பதை நிரூபித்துள்ளனர்.

தன்னுடைய இரண்டாவது குழந்தைக்காக முயலுகின்றபோது, கெம்மா மூரே "கிளியர்புளூ" என்ற மென்பொருளை பயன்படுத்தினார்.

"என்னுடைய ஹார்மோன் நிலைகளையும், பெரும்பாலும் கருத்தரிக்கக்கூடிய நான்கு நாட்களையும் அறிந்துகொள்ள கிளியர்புளூ கருவள கண்காணிப்பு கருவியை நான் பயன்படுத்தினேன்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இதனை பயன்படுத்திய இரண்டாவது மாதமே கருத்தரித்த அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னுடைய மகன் ஆஸ்காரை பெற்றெடுத்தார்.

எதிர்காலத்திலும், ஃபெம்டெக் துறை பெரும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"நாங்கள் பெண்களின் சுகாதரத்தில் வெற்றிகரமாக அமைவதை மட்டுமே பாப்பதில்லை. தனிப்பட்ட சுகாதாரம், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் மார்பக குழாய்கள் போன்ற பகுதிகளிலும் கவனம் செலுத்துகின்றோம்" என்று அவாவிலிருந்து லியே வோன் பிட்டர் தெரிவிக்கிறார்.

நாம் ஏற்கெனவே பிற வாழ்க்கை அம்சங்களில் பயன்படுத்திக் கொண்டுவரும், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மாற்றங்களோடு பல நிறுவனங்கள் இப்போதுதான் வளர்ந்து வருவதால் இந்த தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

சீனா : பல ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தாயாகும் லட்சக்கணக்கான பெண்கள்

காணொளி : போகோ ஹராம் தீவிரவாதிகளை வேட்டையாடும் பெண் கண்காணிப்பாளர்

. இந்த செய்திகள் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கலாம் :

திருமணம் முறிந்தால் மறுதுணை தேடுவது என் உரிமை: பெண்களின் மனநிலை மாற்றம்

வாடகைக்கு வீடு, வாடகையாக ''செக்ஸ்"

கிறித்துவ - முஸ்லிம் ஜோடிகள் இணைவதில் சவால்கள்

திருமணம் செய்யாமல் வாடகைத் தாய் மூலம் தந்தையாகியுள்ள பாலிவுட் இயக்குநர்

துருக்கி: பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறுமியை திருமணம் செய்தால் மன்னிப்பு

BBC Tamil
English summary
When Kathy Beaumont started trying for a baby two years ago, she turned to the many fertility apps on the market to discover when would be the best time of the month to conceive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X