• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீவிரவாதிகளுக்கு சீனா ஆயுத சப்ளை.. மியான்மர் ராணுவம் பரபரப்பு புகார்

|

பீஜிங்: நாடு பிடிக்கும் ஆணவ ஆசை கொண்ட சீனாவின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஹாங்காங், பூட்டான் என அத்துமீறலை அரங்கேற்றினர். இந்தியாவிடமும் வாலாட்ட தொடங்கினர்.

  Data- வை சேகரிக்கும் China- ன் Military-civilian fusion திட்டம்

  அத்தோடு விட்டதா.. மியான்மர் நாட்டிலும் தனது கைவரிசையை ஆரம்பித்துள்ளது சீனா. மியான்மர் நாட்டில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்து அந்த நாட்டு அரசை வீழ்த்துவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக ஒரு பகீர் குற்றச்சாட்டு மியான்மர் ராணுவ தளபதி முன்வைத்துள்ளார்.

  இதன் மூலம் சீனாவின் கோரமுகம் மற்றொரு முறை சர்வதேச சமூகத்தின் முன்பாக அம்பலப்பட்டு நிற்கிறது.

  ஆபரேஷன் அந்தமான்.. இந்தியாவிடம் ஜப்பான் சொன்ன "அந்த" திட்டம்.. இந்திய பெருங்கடலில் சீனாவிற்கு செக்!

  ரஷ்ய சேனலுக்கு பேட்டி

  ரஷ்ய சேனலுக்கு பேட்டி

  மியான்மர் ஆயுதப் படைகளின் தளபதி, மின் ஆங் ஹ்லேங், ரஷ்ய அரசு நடத்தும் தொலைக்காட்சி சேனலான ஸ்வெஸ்டாவுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், தங்கள் நாட்டில் செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் ‘வலுவான சக்திகளால்' ஆதரிக்கப்படுவதாகக் கூறினார். அவர்களை அடக்குவதற்கு சர்வதேச உதவியை நாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

  சீன ஆயுதங்கள்

  சீன ஆயுதங்கள்

  2019ல் மியான்மர் ராணுவத்தைத் தீவிரவாதிகள் தாக்கும்போது பயங்கரவாதிகள் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும் ராணுவ தளபதி குற்றம்சாட்டியுள்ளார். மியான்மரில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கும், நய்பிடாவால் அறிவிக்கப்பட்ட அரகன் ராணுவத்திற்கும் (பயங்கரவாதக் குழு) சீனா நிதி மற்றும் அதிநவீன ஆயுதங்களை வழங்கி வருவதாக லிகாஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மியான்மர் மற்றும் இந்தியா மீது தாக்கத்தை ஏற்படுத்த இந்த மாதிரி பின்வழியில் சீனா செயல்படுவதாக அந்த செய்தி தெரிவித்துள்ளது.

  சீனாவின் நாசக்கார வேலை

  சீனாவின் நாசக்கார வேலை

  2019ம் ஆண்டு நவம்பர் மாதம், மியான்மரின் ராணுவம் தடைசெய்யப்பட்ட, தாங் தேசிய விடுதலை ராணுவத்தின் இடத்தில் அதிரடி ரெய்டு நடத்தியது. அப்போது, வான் ஏவுகணைகள் உட்பட ஏராளமான ஆயுதங்களை மீட்டெடுத்தது. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை "சீன ஆயுதங்கள்" என்று மியான்மர் ராணுவம் அப்போது அறிவித்திருந்தது

  இந்தியாதான் சீனாவின் இலக்கு

  இந்தியாதான் சீனாவின் இலக்கு

  தென்கிழக்கு ஆசியாவில் பயங்கரவாத குழுக்களுக்கு சீனா நிதியுதவி அளிக்கும் இந்த குற்றச்சாட்டு புதியதல்ல. சீனாவின் வாடிக்கை இதுவாக உள்ளது.

  "சீனா தெற்காசியாவில் பல பரிமாண விளையாட்டை விளையாடுகிறது. இந்தியாவை பலவீனப்படுத்த சீனா விரும்புகிறது. இந்தியா பாகிஸ்தானுடனான மோதல் போக்கில் உள்ளது, மியான்மரிலிருந்து ஒரு புதிய எதிரியை உருவாக்கினால் பல முனைகளில் இந்தியா கவனம் சிதறும் என்பது சீன எண்ணம்" என்று ஆஸ்திரேலிய கல்வியாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

  மியான்மருக்கு சப்போர்ட் கிடைக்காது

  மியான்மருக்கு சப்போர்ட் கிடைக்காது

  மியான்மரில் ஏழு வெவ்வேறு குழுக்கள் சீன ஆயுதங்களையும் ஆதரவையும் பெற்றுள்ளன என்றும், மியான்மர் அரசு மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருப்பதால், மேற்கு உலகம், அந்த நாட்டு அரசை காக்க முன்வராது என்பதால், சீனா, இப்படி காய் நகர்த்துகிறது என்றும்,கூறினார் அவர்.

  அநியாயம்

  அநியாயம்

  அரகன் ராணுவம் மியான்மரின் ராகைன் மாநிலத்தில் மிகப்பெரிய பயங்கரவாதக் குழுவாகும், அரசியல் கட்சியான யுனைடெட் லீக் ஆஃப் அரக்கனின் (யுஎல்ஏ) ஆயுதப் பிரிவாகும் இது. பயங்கரவாதிகள் சீனாவிலிருந்து ஆயுதங்களை இலவசமாகப் பெறுவதில்லை, ஆனால் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சீனாவுடன் இணைக்கப்பட்ட முன்னணி அமைப்புகளுக்கு இவை பணம் செலுத்துகின்றன. அது கடைசியில் சீனாவை சென்று சேர்கிறது.

   
   
   
  English summary
  Myanmar has accused China of arming terrorist groups like Arakan Army (AA) and Arakan Rohingya Salvation Army (ARSA) and has sought international help to suppress them.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X