பிரான்ஸின் லா ரீயூனியன் தீவில் கரை ஒதுங்கிய பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதா?
பாரீஸ்: பிரான்ஸில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமானம் ஒன்றின் வால் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.370 மாயமானது. பின்னர் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.
விமானத்தை தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஓராண்டுக்கு மேலாக தேடி வருகிறார்கள். இருப்பினும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.

பிரான்ஸ்
பிரான்ஸில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள லா ரீயூனியன் தீவில் புதன்கிழமை விமானத்தின் வால் பகுதி கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. கடற்கரையை சுத்தம் செய்பவர்கள் அதை பார்த்துவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

எம்.ஹெச். 370
லா ரீயூனியனில் கரை ஒதுங்கிய பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த பாகம் பல மாதங்களாக நீருக்கு அடியில் இருந்திருக்கும் என்பதற்கான அடையாளங்கள் அதில் உள்ளன.

விசாரணை
விமான பாகம் குறித்து பிரான்ஸ் நாட்டு விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாயமான விமானம் பற்றிய விசாரணைக்கு தலைமையேற்றுள்ள ஆஸ்திரேலியா போயிங் விமான தயாரிப்பாளர்களை அணுகி கரை ஒதுங்கிய பாகம் எம்.ஹெச். 370 உடையதா என்பதை கண்டுபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

எம்.ஹெச். 17
கடந்த ஆண்டு ஜுலை மாதம் 17ம் தேதி உக்ரைனில் மலேசிய விமானம் எம்.ஹெச். 17 மீது பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் பலியாகினர். இந்நிலையில் இது குறித்து சர்வதேச தீர்ப்பாயம் அமைப்பதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்துவிட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications