For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவம்பர் 13ம் தேதி உலகம் அழியப் போகுதாமே...???

Google Oneindia Tamil News

லண்டன்: வேற்றுக்கிரகத்தில் இருந்து பறந்து வரும் மர்மப்பொருள் ஒன்று அடுத்தமாதம் பூமியின் மீது மோதப் போவதாகவும், அப்போது உலகம் அழியும் என்றும் புதிய வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

விண்வெளியில் பல விண்கற்கள் மிதந்தபடி உள்ளன. அவ்வப்போது அவை பூமிக்கு அருகில் வந்து செல்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகின்றன. சில புவியின் ஈர்ப்பு சக்தி காரணமாக பூமியில் விழுந்து நொறுங்குகின்றன.

Mysterious space object set to enter Earth's atmosphere next month

இத்தகைய விண்கற்களால் பூமிக்கு ஆபத்து என அவ்வப்போது தகவல்கள் வருவது வாடிக்கை. அந்தவகையில் தற்போது அடுத்தமாதம் விண்வெளியில் இருந்து பறந்து வரும் மர்மபொருள் ஒன்று பூமியில் மோதப் போகிறது என்ற தகவல் இணையத்தில் பரபரப்பாக உலா வருகிறது.

இந்த மர்மப்பொருளானது வேற்றுகிரகத்தில் இருந்து அனுப்பப்பட்டது எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த மர்மப்பொருள் மோதுவதால் உலகம் அழிந்து விடும் என்றும் வேற்றுக்கிரகவாசிகள் குறித்து ஆராய்ந்து வரும் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 7 அடி நீளமுள்ள அந்த மர்ம பொருளுக்கு ‘டபிள்யூ. டி. 1190 எப்' என பெயரிடப்பட்டுள்ளது. அது வருகிற நவம்பர் 13-ந் தேதி பூமியில் வந்து மோதும் என்றும், இந்திய பெருங்கடலில் இலங்கை கடற்பகுதியில் விழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது குறித்து உலகத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A mysterious piece of space junk dubbed WT1190F will enter Earth’s atmosphere on Friday Nov. 13, scientists say, plunging into the Indian Ocean about 62 miles off the coast of Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X