For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜப்பான் மீது பறந்தது வேற்று கிரக வாகனமா? வெள்ளை உருவத்தில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பான் மீது மர்மமான ஒரு வெள்ளை உருவத்தில் பலூன் போன்ற ஒன்று பறந்தது. அது வேற்று கிரக வாகனமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அந்த குறிப்பிட்ட மர்ம பொருளை ஜப்பானின் எந்த அரசு துறைகளும் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடவில்லை. அதனால் குழப்பம் ஏற்பட்டது.

Recommended Video

    Japan- ல் பறந்த மர்ம பொருள்... UFO என பதறிய மக்கள்

    ஜப்பானின் சென்டாய் நகரில் கடந்த புதன்கிழமை வெள்ளையாக வட்ட வடிவத்தில் பலூன் போன்ற உருவம் பறந்தது. இதை சென்டாய் நகரில் வசிப்பவர்கள் பலர் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் விவாதித்தனர். 'அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்' என்று பெயரிட்டு விவாதித்தனர்.

    "இந்த வெள்ளை பொருள் அசைவதில்லை. அது என்ன? யாராவது என்னிடம் சொல்ல முடியுமா?" ஒரு சமூக வலைதளவாசி எழுதினார், மற்றவர்கள் ஜப்பானிய மொழியில் "அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்" என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி என்னவென்று கேட்டார்கள்.

    லாக்டவுன் தளர்வு- மிகமோசமான 2-வது கொரோனா பாதிப்பு அலை இந்தியாவை தாக்கும்- ஜப்பான் ஆய்வு மையம் லாக்டவுன் தளர்வு- மிகமோசமான 2-வது கொரோனா பாதிப்பு அலை இந்தியாவை தாக்கும்- ஜப்பான் ஆய்வு மையம்

    வேற்று கிரக வாகனமாக

    வேற்று கிரக வாகனமாக

    அதிகாரிகள் இந்த பொருளால் குழப்பமடைந்தனர். உள்ளூர்வாசிகள் மற்றும் ஊடகங்களால் எடுக்கப்பட்ட நெருக்கமான படங்கள், பலூன் போன்ற ஒரு பொருளைக் கொண்டு அது இயக்கப்படுவதாக இருந்தது. சமூக வலைதளவாசிகள் சிலர் இதை வேற்று கிரக வாகனமா என்று கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தனர்.

    பறக்கவிடவில்லை

    பறக்கவிடவில்லை

    இதற்கிடையே ஜப்பான் நாட்டு வானிலை ஆய்வு மையத்திடம் சம்பந்தப்பட்ட வெள்ளை உருவம் , அவர்களின் ஆராய்ச்சி கருவியா என்று கேட்டனர். ஆனால் இது போன்ற உருவத்தில் தாங்கள் எதையும் பறக்கவிடவில்லை என்று ஜப்பான் வானிலை மையம் மறுத்துவிட்டது.

    கண்டுபிடிக்க முடியவில்லை

    கண்டுபிடிக்க முடியவில்லை

    இதற்கிடையே பலர் சென்டாய் நகரில் உள்ள பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் மர்ம பொருள் வானில் பறப்பதாக கூறினார்கள். இதையடுத்து அவர்கள் ஹெலிகாப்டரில் வானில் பறந்து சென்று தேடினர். ஆனால் அவர்கள் சென்ற சமயத்தில் அப்படியான எந்த ஒரு பொருளையும் காணமுடியவில்லை. இதனால் என்ன பொருள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    என்ன ஆய்வு பொருள்

    என்ன ஆய்வு பொருள்

    இதற்கிடையே கியூஷூ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி பலூன் என்று சிலர் சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர். இதனால் அந்த பல்கலைக்கழகத்தை அழைத்து பலரும் என்ன வகை ஆராய்ச்சி பலூன் என்று கேட்க ஆரம்பித்தனர். இதையடுத்து பல்கலைக்கழகம் தங்களுடைய ஆராய்ச்சி பலூன் இல்லை என்று மறுத்துவிட்டது. இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் வெள்ளையான மர்ம பொருள் குறித்து ஜப்பான் முழுவதும் பரவி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    வெளிநாட்டு உளவு பலூன்?

    வெளிநாட்டு உளவு பலூன்?

    இது என்னடா புதுசா இருக்கே என்று வியப்படைந்த ஜப்பான் அரசு, பலூன் போன்ற வெள்ளை உருவம் என்னவென்று விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அது வெளிநாட்டு உளவு பலூன் ஆக கூட இருக்கலாம் என்று தகவல்கள் பரவின. இதற்கிடையே கியூஷூ பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான ஷினிச்சிரோ ஹிகாஷினோ, மர்மமான பொருளில் சூரிய பேனல்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், இது விஞ்ஞான ஆராய்ச்சி நடத்தவோ அல்லது எதையாவது கண்காணிக்கவோ சாத்தியம்" என்று கூறினார். இதனால் கடந்த இரு நாளாக வெள்ளை உருவம் ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    a mysterious balloon-like object seen floating across the skies of northern Japan has captured national attention
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X