For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலிபோர்னியாவில் பதற்றம்.. உணவு திருவிழாவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு.. மூவர் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பூண்டு திருவிழாவின் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியில் இருந்து மக்கள் தப்பித்து ஓடி வருவதும், அதன் பின்னணி துப்பாக்கி சுடும் சத்தமும் அடங்கிய வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

Mystery person shooting at food festival.. 3 died..Tension in California

கடந்த 1979ம் ஆண்டு முதல் கில்ராய் நகரில் பூண்டு மற்றும் உணவு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. உணவு, பானம், பொழுதுபோக்கு மற்றும் சமையல் போட்டிகள் இந்த திருவிழாவில் இடம்பெறுகின்றன. உலகின் மிகப்பெரிய கோடைகால உணவுத் திருவிழாவாக இது கருதப்படுகிறது

வடக்கு கலிபோர்னியாவில் கில்ராய் பகுதியில் வெளிப்புற கிறிஸ்துமஸ் ஹில் பூங்காவில் பூண்டு மற்றும் உணவு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தன்னிடமிருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதனால் உணவு திருவிழாவில் திரண்டிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

துப்பாக்கிச்சூட்டை அடுத்து அங்கிருந்த மக்கள் அச்சமடைந்து ஓடி வரும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில், உணவு திருவிழாவில் பங்கேற்றவர்கள் துப்பாக்கி சத்தத்தை கேட்டு குழப்பத்தில் சிதறி ஓடுவது அதில் தெளிவாக பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள கில்ராய் போலீஸார், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

உள்ளூர் கவுன்சில் சபையை சேர்ந்த டியான் பிராக்கோ என்பவர் நியூயார்க் டைம்ஸ் ஊடகத்திடம், உணவு திருவிழாவின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக கூறினார்.

இதனிடையே கலிபோர்னியாவின் கில்ராய் நகரில் நிகழ்த்தப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் சட்ட அமலாக்கம் உள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை, எனவே கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

English summary
The shooting incident during the Garlic Festival in the US state of California has caused a stir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X