For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காலியாக கிடக்கும் உலகின் அதிஉயரக் கட்டிடம்... மவுனம் காக்கும் வடகொரியா... குழப்பத்தில் மக்கள்!

Google Oneindia Tamil News

பியாங்யாங்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற வட கொரியா நாட்டில் உள்ள உலகின் அதிஉயர கட்டிடம், பயன்பாடின்றி காலியாக கிடைப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரிய தலைநகர் பியாங்யாங் நகரில் உள்ளது யக்யாங்கு ஹாட்டல். 105 அடுக்குமாடிகளுடன், பிரமிட் வடிவிலான இந்த ஹோட்டலின் கட்டுமானப்பணிகள் கடந்த 1987 ஆண்டு தொடங்கின.

30 ஆண்டுகள் நடைபெற்ற இந்த ஓட்டலின் கட்டுமான பணிகள் முடிவடைந்துவிட்டன. இருப்பினும் இந்த ஹோட்டல் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

அதிநவீன வசதிகள்...

அதிநவீன வசதிகள்...

750 மில்லின் டாலர் செலவில், மூன்றாயிரம் அறைகள், கேசினோ, எட்டு நகரும் அடுக்குமாடிகள், ஐந்து நகரும் ரெஸ்டாரென்டுகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது இந்த ஹோட்டல்.

கின்னஸ் சாதனை...

கின்னஸ் சாதனை...

உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்தக் கட்டிடம், வடகொரியாவின் மிகப்பெரிய அடையாளமாக திகழும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

குழப்பம்...

குழப்பம்...

ஆனால் கட்டுமானப்பணிகள் முடிந்து சில ஆண்டுகள் ஆன பின்னரும், ஓட்டலை திறக்காதது ஏன் என்ற கேள்வி வடகொரிய மக்கள் உள்பட பலரின் மனதில் எழுகிறது. முன்னதாக கடண்டஹ் 2012ம் ஆண்டு இந்த ஹோட்டல் திறக்கப்படுவதாக இருந்தது. பின்னர் அது 2013ம் ஆண்டாக தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் அதுவும் காரணங்கள் கூறப்படாமல் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான கோபுரம்...

வித்தியாசமான கோபுரம்...

பியாங்யாங் நகரில் விண்ணை முட்டிக்கொண்டு நிற்கும் இந்த ஓட்டலின் பால் பாயின்ட் பென் வடிவிலான கோபுரம், அங்கு வரும் அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் ஓர் அதிசயம் ஆகும்.

English summary
North Korea's Ryugyong Hotel is the world's tallest unoccupied building, according to Guinness World Records. There are unfinished buildings all over the world, but the most mysterious by far is the Ryugyong Hotel in Pyongyang, the capital of North Korea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X