For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குட்டீஸ் உங்க அப்பாவுக்காக என்ன செய்யப் போறீங்க... பேசாம, செவ்வாய் எரிமலைக்கு பேர் வைச்சிடுங்க!

Google Oneindia Tamil News

லண்டன்: செவ்வாயில் உள்ள எரிமலைகளுக்கு குழந்தைகள் தங்கள் தந்தையின் பெயரைச் சூட்டும் புதிய திட்டம் ஒன்று இணையத்தில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தந்தையர் தினம் கொண்டாடப் பட்டது. இந்நிலையில், 'உங்களுக்காக எதை வேண்டுமானாலும் வாங்கித் தரும் தந்தைக்கு, குழந்தையான நீங்கல் என்ன செய்யப் போகிறீர்கள்?' என்ர கேள்வியுடன் புதுமையும், வேடிக்கையும் கலந்த திட்டம் ஒன்று இணையத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், அதற்குப் பதிலாக, ‘செவ்வாயில் உள்ள எரிமலைகளுக்கு உங்கள் தந்தையின் பெயரைச் சூட்டலாம்' என தெரிவிக்கப் பட்டுள்ளது.

டாட்ஸ் ஆன் மார்ஸ்...

டாட்ஸ் ஆன் மார்ஸ்...

யுவிங்கு ( unwingu) என்ற குழு இத்திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு ‘டாட்ஸ் ஆன் மார்ஸ்' எனப் பெயரிடப் பட்டுள்ளது. தந்தையர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக இத்திட்டத்தை அறிவித்துள்ளது இந்த அமைப்பு.

எரிமலை பள்ளங்கள்...

எரிமலை பள்ளங்கள்...

செவ்வாயில் உள்ள 5 லட்சத்து 80 ஆயிரம் எரிமலை பள்ளங்களுக்கு விதவிதமான பெயர்களைச் சூட்டுவது அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால், சர்வதேச விண்வெளி அமைப்பால் இந்த பெயர்கள் அங்கீகரிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் மேப்...

செவ்வாய் மேப்...

ஆனாலும், குழந்தைகளின் அன்பால் சூட்டப்படும் இந்தப் பெயர்களுடன் கூடிய செவ்வாயின் மேப், செவ்வாயில் குடியிருப்புகளை ஏற்படுத்தும் மார்ஸ் ஒன் விண்வெளி ஓடத்துடன் அக்கிரகத்திற்கு அனுப்பி வைக்கப் பட உள்ளது.

முகவரிகளாகும்...

முகவரிகளாகும்...

அதோடு, எதிர்காலத்தில் செவ்வாயில் குடியேற்றங்கள் அதிகரிக்கும் போது முகவரிகளாக இந்தப் பெயர்கள் பயன்படும் என்றும் இந்த அமைப்பு கூறுகின்றது.

English summary
Incase you’re looking for a last-minute gift for you father – or you forgot about Father’s day! – the commercial space company Uwingu has a special Father’s Day promotion where you can name a crater on Mars after your dad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X