For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே இடம்.. ஒன்னும் பண்ண முடியாது.. இம்ரான் கானுடன் மோடி சந்திப்பு.. பதிலுக்கு ஒரு சிரிப்பு

Google Oneindia Tamil News

பிஷ்கேக்: கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெறும், ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்.

கிர்கிஸ்தான் நாட்டுத் தலைநகர் பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Narendra Modi exchanged pleasantries with the Imran Khan

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அப்போது தீவிரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவை பாகிஸ்தான் கைவிடாதவரை, அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று பல நாட்டு தலைவர்களும் இருக்கக்கூடிய அரங்கில் மோடியும், இம்ரான் கானும் ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிட்டது. அப்போது இம்ரான் கானை பார்த்து, தனது வழக்கமான புன்னகையை உதிர்த்தார் மோடி. இந்தச் சந்திப்பு நடைபெற்றதை, அதிகாரிகள் வட்டம் உறுதி செய்துள்ளது.

முன்னதாக மே 26-ஆம் தேதி மோடியை தொலைபேசியில் அழைத்த, இம்ரான் கான், இரு நாட்டு உறவுகள் தொடர்பாக பல்வேறு விஷயங்களை விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்தார். இதேபோல கடிதம் மூலமாகவும் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிரதமர், இந்திய பிரதமர், மோடியை அழைத்தார்.

கூடங்குளம் விவகாரம்.. ராதாபுரத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு.. பாளையங்கோட்டையில் சீறிய சீமான் கூடங்குளம் விவகாரம்.. ராதாபுரத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு.. பாளையங்கோட்டையில் சீறிய சீமான்

ஆனால் 2016 ஆம் ஆண்டு பதன்கோட், பகுதியில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு, பாகிஸ்தானுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று மத்திய அரசு முடிவு எடுத்தது. தற்போது புல்வாமா தாக்குதலும் இந்த முடிவுக்கு உரம் சேர்த்துவிட்டதால், பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தையை இந்தியா தவிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Narendra Modi exchanged usual pleasantries with the Prime Minister of Pakistan Imran Khan in the Leaders' Lounge at the SCO Summit in Bishkek Kyrgyzstan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X