For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டைம் இதழின் இந்த ஆண்டின் 'மாமனிதர்' ஆவாரா நரேந்திர மோடி?

Google Oneindia Tamil News

நியூயார்க்: 2013ம் ஆண்டின் மாமனிதர் போட்டியாளர் பட்டியலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் இடம் பெற்றிருக்கிறாராம்.

மேலும் இதுதொடர்பான ஆன்லைன் கருத்துக் கணிப்பில் இவருக்கே ஆதரவும் அதிகமாக காணப்படுகிறதாம்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவி்க்கப்பட்டது முதல் நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து வரும் மோடிக்கு, டைம் இதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் பெருமை கிடைத்தால் அது பாஜகவுக்கு ஊக்கம் தருவதாக அமையும் என்று அக்கட்சி நம்புகிறது.

42 உலகத் தலைவர்கள்

42 உலகத் தலைவர்கள்

டைம் இதழின் போட்டியாளர் பட்டியலில் மொத்தம் 42 உலகத் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரும் அட்கம்.

அடுத்த மாதம் ரிசல்ட்

அடுத்த மாதம் ரிசல்ட்

இவர்ளில் யார் 2013ம் ஆண்டுக்கான மாமனிதராக தேர்ந்தெடுக்கப்படப் போவது என்பது அடுத்த மாதம் தெரிய வரும்.

ஒபாமாவும், ஜப்பானின் ஷின்ஸோவும்

ஒபாமாவும், ஜப்பானின் ஷின்ஸோவும்

இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, பாகிஸ்தானின் மலாலா யூசபஸாய், அமேஜான் தலைமை செயலதிகாரி ஜெப் பெஸோஸ் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

அட, குட்டி இளவரசரும்

அட, குட்டி இளவரசரும்

இங்கிலாந்தின் குட்டி இளவரசான கேட் மிடில்டன்- வி்ல்லியமின் மகன் இளவரசன் ஜார்ஜும் இந்தப் பட்டியலில் இருக்கிறாராம்.

சர்ச்சைக்குரிய தேசியவாதி

சர்ச்சைக்குரிய தேசியவாதி

மோடி குறித்து டைம் இதழ் கூறுகையில் சர்ச்சைக்குரிய இந்து தேசியவாதி, குஜராத்தின் முதல்வர், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றக் கூடிய சக்தி வாய்ந்தவராக திகழும் தலைவர் என்று வர்ணித்துள்ளது.

ஒரே தலைவர்

ஒரே தலைவர்

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் மோடி மட்டுமே.

இதுவரை 2650 ஓட்டு

இதுவரை 2650 ஓட்டு

மோடிக்கு இதுவரை 2650 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. அதாவது 25 சதவீத ஓட்டு. ஆன்லைன் கருத்துக் கணிப்பில் மோடியே முன்னணியில் இருக்கிறார்.

English summary
BJP's PM candidate Narendra Modi has been shortlisted by Time for Person of the Year title
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X