For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிவிட்டரில் ஒபாமாவைக் கலாய்த்த விண்வெளி வீரர்... சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து!

Google Oneindia Tamil News

நாசா: நாசா விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லிக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அவருக்கு மட்டுமல்ல அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கும்தான்.

தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் முகாமிட்டிருக்கும் கெல்லி, அங்கிருந்தபடியே டிவிட்டர் மூலம் ஒபாமா உள்ளிட்டோருடன் சாட் செய்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

கெல்லி டிவிட்டரில் சாட் மட்டும் செய்யவில்லை. மேலும் பல அரிய அனுபவத்தையும் அங்கிருந்தபடியே பெற்று மகிழ்ந்துள்ளார்.

ஈஎஸ்பிஎன்...

ஈஎஸ்பிஎன்...

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தபடி அவர் ஈஎஸ்பிஎன் டிவியைப் பார்த்து மகிழ்கிறார். விளையாட்டுப் போட்டிகளைப் பார்த்து மகிழ்ந்து அதை டிவிட்டரிலும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வீட்டின் புகைப்படம்...

வீட்டின் புகைப்படம்...

அத்தோடு நில்லாமல் அங்கிருந்தபடியே தனது வீட்டைப் புகைப்படம் எடுத்து அதை அனுப்பி குடும்பத்தினரையும் குஷிப்படுத்தியுள்ளார் கெல்லி.

ஒபாமாவை சிரிக்க வைத்த கெல்லி...

ஒபாமாவை சிரிக்க வைத்த கெல்லி...

சனிக்கிழமையன்று அவர் டிவிட்டர் மூலம் சாட் செய்தார். அதில் உள்ளே புகுந்து அவரை ஒபாமா கலாய்த்தார். பதிலுக்கு கெல்லியும் காமெடியாக பதிலைப் போட்டு ஒபாமாவையும் சிரிக்க வைத்தார்.

ஊர் சுற்றுவீர்களா?

ஒபாமா அனுப்பிய டிவிட்டில், ‘ஹேய் கெல்லி, புகைப்படங்கள் அருமையாக உள்ளன. நீங்கள் ஜன்னலைத் திறந்து வெளியே போய் உலாவுவது உண்டா?' என்று கேட்டிருந்தார்.

உங்களுக்கு மட்டும் தான்...

அதற்கு கெல்லிய அனுப்பிய பதிலில், ‘அதிபரான உங்களுடைய கேள்விக்குப் பதில் அனுப்புவதைத் தவிர வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை' என்று கலாய்த்திருந்தார் கெல்லி.

உடற்பயிற்சி...

இன்னொரு டிவிட்டில், ‘இப்போது எங்களுக்கு இங்கு ஈஎஸ்பிஎன் தெரிகிறது. எனக்குப் பிடித்த அணி ஹூஸ்டன் டெக்ஸான்ஸ்' என்றும், இன்னொரு டிவிட்டில், ‘வாரத்திற்கு 6 நாட்கள், தினசரி 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன்' என்றும் கூறியுள்ளார் கெல்லி.

ஐபேட் இருக்கிறது...

அபிக் இஸ்ரேலி என்பவர், அங்கே ஸ்மார்ட் போன் இருக்கா என்று கேட்டிருந்தார். அதற்கு கெல்லி, இல்லை ஆனால் ஐபேட் இருக்கிறது என்று பதில் போட்டுள்ளார் கெல்லி.

ரொம்ப ஹாட்...

சூரியன் குறித்த கேள்விக்கு, ‘சூரியன் மிகவும் பிரகாசமாக தெரிகிறது. ரொம்ப சூடாக இருக்கிறது. சூரியனுக்குள்ளேயே போய்ப் பார்ப்பது போல இருக்கிறது' என்று கூறியுள்ளார் கெல்லி.

English summary
On Saturday, NASA astronaut Scott Kelly took some time to answer questions on Twitter, making sure to crack some jokes in the process ... including one aimed at President Barack Obama.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X