For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாசாவின் வான வேடிக்கை... ஆஸ்டிராய்டை துரத்திப் பிடித்து "சாம்பிள்" எடுக்க விண்கலம் அனுப்புகிறது

Google Oneindia Tamil News

கேப் கேனவரல், புளோரிடா: நாசா இந்த வாரம் இதுவரை செய்திராத ஒரு செயலைச் செய்யப் போகிறது. பென்னு என்று பெயரிடப்பட்ட ஆஸ்டிராய்டை துரத்திச் சென்று அங்கிருந்து மாதிரி எடுத்து வருவதற்கு ஒரு விண்கலத்தை அது அனுப்ப உள்ளது.

கரும்பாறைகளால் நிறைந்தது இந்த ஆஸ்டிராய்ட். இதுவரை எந்த ஆஸ்டிராய்டையும் மிக மிக நெருக்கமாக நாசா ஆராய்ந்ததில்லை. இந்த முறைதான் முதல் முறையாக ஆஸ்டிராய்டை நெருங்கிச் சென்று அதிலிருந்து சாம்பிள் எடுத்து வரவுள்ளது.

பென்னு ஆஸ்டிராய்டை நெருங்கிச் சென்று அதன் நிலப்பரப்பிலிருந்து மண் மாதிரியை எடுத்து பூமிக்குக் கொண்டு வரவுள்ளது இந்த விண்கலம். சொல்வதற்கு வெகு சுலபமான இது தோன்றினாலும், இந்த வேலையை முடித்து விட்டு இந்த விண்கலம் பூமிக்குத் திரும்ப 7 வருடமாகும்.

பென்னுவிலிருந்து மண்ணு...

பென்னுவிலிருந்து மண்ணு...

புளோரிடாவின் கேப் கேனவரல் விண்கலம் ஏவும் மையத்திலிருந்து வியாழக்கிழமை இரவு இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்த விண்கலம்தான் பென்னுவிலிருந்து மண்ணைக் கொண்டு வரவுள்ளது.

2023ம் ஆண்டு...

2023ம் ஆண்டு...

எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் 2023ம் ஆண்டு இந்த விண்கலம் பென்னுவின் மாதிரியை எடுத்துக் கொண்டு பூமிக்குத் திரும்பும். பென்னு ஆஸ்டிராய்டானாது பூமியிலிருந்து 4 கோடி மைல்கள் தொலைவில் உள்ளது.

நிலாவில் மண்...

நிலாவில் மண்...

அப்பல்லோ விண்கலம் நிலவுக்குப் போய் மண் எடுத்து வந்ததுதான் மிகப் பெரிய மனித சாதனையாக உள்ளது. அதற்கு அடுத்து இந்த ஆஸ்டிராய்டில் மண் மாதிரியை எடுக்கவுள்ளான் மனிதன்.

விண்கற்களின் சிதறல்கள்...

விண்கற்களின் சிதறல்கள்...

இதற்கு முன்பு யாரும் இதுபோல ஆஸ்டிராய்டில் போய் இறங்கி மண் மாதிரியை எடுத்ததில்லை. இதுதான் முதல் முறையாகும். இதற்கு முன்பு விண்கற்களின் சிதறல்களை நாம் விண்ணிலிருந்து சேகரித்துள்ளோம். அதுதான் அதிகபட்சம் ஆகும்.

கைகள் போன்ற அமைப்பு...

கைகள் போன்ற அமைப்பு...

தற்போது நாசா அனுப்பவுள்ள ஆசிரிஸ் - ரெக்ஸ் (Osiris-Rex) என்ற விண்கலமானது ரோபோட்டுகளுடன் கூடிய விண்கலமாகும்.. இது சம்பந்தப்பட்ட பென்னு ஆஸ்டிராய்டிலிருந்து கற்களையும், மண்ணையும் கொண்டு வரவுள்ளது. இதற்காக அந்த விண்கலத்தில் கைகள் போன்ற ரோபோட் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
NASA is going after an asteroid this week like never before. It's launching a spacecraft to the exotic black rock named Bennu, vacuuming up handfuls of gravel from the surface, and then in a grand finale, delivering the pay dirt all the way back to Earth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X