For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செவ்வாயில் வழிந்தோடுகிறது தண்ணீர்... உறுதிப்படுத்தியது நாசா

Google Oneindia Tamil News

நாசா: செவ்வாய் கிரகத்தில் கோடை காலத்தில் தண்ணீர் திரவ நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதனால் அங்கு மனிதர்கள் வசிக்கக் கூடிய சூழ்நிலை குறித்த சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் முடுக்கி விடவுள்ளனர்.

மார்ஸ் ரீகனயனஸன்ஸ் ஆர்பிட்டர் (எம்.ஆர்.ஓ) மூலம் கிடைத்துள்ள தகவல்களை ஆய்வு செய்து பார்த்து இந்த முடிவுக்கு நாசா வந்துள்ளது. முன்பு எப்படி அபரிமிதமாக அங்கு தண்ணீர் இருந்ததோ அதேபோல இப்போதும் அங்கு தண்ணீர் இருப்பதாக கூறுகிறது நாசா.

செவ்வாயில் உள்ள மலைப் பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும், தரைப்பரப்பிலும் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் குளிர்காலத்தில் உறைந்து போய்க் காணப்படுகிறது. வெயில் காலத்தில் திரவ நிலைக்கு மாறி ஓடுகிறது.

இதுகுறித்து தகவல்களை நேற்று வாஷிங்டனில் வெளியிட்டுப் பேசினார் நாசாவின் அறிவியல் இயக்குநரகத்தின் உதவி நிர்வாகியும், விண்வெளி வீரருமான ஜான் கிரின்ஸ்பெல்ட்.

யூகம் உண்மையானது

யூகம் உண்மையானது

அவர் கூறுகையில், நீண்ட காலமாக நாம் யூகங்களின் அடிப்படையில் சந்தேகப்பட்டு வந்ததை தற்போது அறிவியல் பூர்வமாக உறுதி செய்துள்ளோம். தண்ணீர் இருக்கிறதா என்ற நீண்ட கால தேடுதலுக்கு முடிவு கண்டுள்ளோம். அங்கு தண்ணீர் உள்ளது.

இன்றவும் ஓடுகிறது தண்ணீர்

இன்றவும் ஓடுகிறது தண்ணீர்

இது ஒரு மிக முக்கியமான முன்னேற்றம். இன்றளவும் செவ்வாயின் தரையில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தண்ணீரானது குளிர்காலத்தில் உறை நிலையில் உள்ளது. இவை ஹைட்ரஜன் மூலக்கூறுகளாக மாறிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளன.

உறைநிலையில்

உறைநிலையில்

இந்த உறைநிலை தண்ணீரானது உப்புப் படிவத்துடன் காணப்படுகிறது. செவ்வாயின் பல பரப்புகளிலும் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

முதலில் சொன்ன இந்தியர் ஓஜா

முதலில் சொன்ன இந்தியர் ஓஜா

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லூஜேந்திரா ஓஜாதான் உண்மையில் இந்த உறை நிலைத் தண்ணீரை 2010ம் ஆண்டு கண்டுபிடித்திருந்தார். அவரும் நேற்றைய செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பெர்க்குளோரேட்டுகள்

இந்த உப்பில் மெக்னீசியம் பெர்க்குளோரேட், மெக்னீசியம் குளோரேட், சோடியம் பெர்குளோரேட் ஆகிய வேதிப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. பூமியிலும் கூட இயற்கையாவே இந்த பெர்குளோரேட்டுகள் பாலைவனத்தில் காணப்படுகின்றன. சில வரை பெர்குளோரேட்டுகள் ராக்கெட்டின் புரப்பல்லன்ட் ஆக பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைட்ரஜன் மூலக்கூறுகளுடன்

ஹைட்ரஜன் மூலக்கூறுகளுடன்

முன்பும் கூட பெர்குளோரேட்டுகள் செவ்வாயில் கண்டறியப்பட்டன. நாசாவின் பீனிக்ஸ் லேன்டர், கியூரியாசிட்டி ஆகியவை இதைக் கண்டுபிடித்திருந்தன. வைக்கிங் விண்கலப் பயணத்தின்போதும் கூட இது கண்டறியப்பட்டது. ஆனால் தற்போதுதான் முதல் முறையாக ஹைட்ரஜன் மூலக்கூறுகளுடன் கூடிய பெர்க்குளோரேட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆய்வுகள் வேகம் பிடிக்கும்

ஆய்வுகள் வேகம் பிடிக்கும்

நீர் ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு உயிரினங்கள் வசிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள், உயிர் வாழத் தேவையான பிற அம்சங்கள் உள்ளதா என்பது குறித்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

English summary
New findings from NASA's Mars Reconnaissance Orbiter (MRO) provide the strongest evidence yet that liquid water flows intermittently on present-day Mars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X