For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரியப் புயலால் டிசம்பரில் 6 நாட்கள் பூமியே இருட்டாயிரும்.. நாசா கூறுவதாக சொல்லுவாங்க.. நம்பிராதீங்க

Google Oneindia Tamil News

நியூயார்க்: மார்கழியில் கொட்டித்தீர்க்கும் பனி வேண்டுமானால் சூரியனின் கதிர்களைக் குறைப்பதுபோன்ற ஒரு உணர்வு உங்களுக்கு ஏற்படலாம்.

ஆனால், ஃபேஸ்புக், டுவிட்டரில் சூரியனானது டிசம்பரில் ஆறு நாட்கள் பூமியை இருளாக்கும் என்ற செய்தியை பார்த்தீர்கள் என்றால் தயவு செய்து நம்பாதீர்கள்.

ஏனெனில், அச்செய்தி முழுக்க, முழுக்க ஒரு வதந்தியே. இதனை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமே தெரிவித்துள்ளது.

இருளில் மூழ்கும் உலகம்:

இருளில் மூழ்கும் உலகம்:

அந்த வதந்திச் செய்தியில், "சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில்மூழ்கும்.

சூரிய மண்டலப் புயல்:

சூரிய மண்டலப் புயல்:

சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல்வீசுவது உண்டு. சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும்.

செயற்கைகோள் பாதிப்பு:

செயற்கைகோள் பாதிப்பு:

பெரும்பாலான சூரிய புயல்களால், பூமியில் இருந்து ஏவப்படும் செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அந்த ஆறு டிசம்பர் நாட்கள்

அந்த ஆறு டிசம்பர் நாட்கள்

அத்தகைய பயங்கர சூரியமண்டல புயல் ஒன்று டிசம்பர் மாதம் வீச உள்ளது. டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி அந்த புயல் வீசத் தொடங்கும். 22 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு புயலின் தாக்கம் நீடிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

மிகப் பெரிய புயலாம்:

மிகப் பெரிய புயலாம்:

கடந்த 250 ஆண்டு கால வரலாற்றில்இல்லாத அளவுக்கு இந்த சூரிய மண்டல புயல் மிகப்பெரியது என்று தெரிய வந்துள்ளது. சூரிய மண்டலத்தில் புயல்வீசும் 6 நாட்களும் வான்வெளியில் தூசிகள், துகள்கள் சுழன்றடிக்கப்பட்டு நிரம்பி விடும்.

தூசிகள் மறைக்கும் சூரியன்:

தூசிகள் மறைக்கும் சூரியன்:

தூசிகள் நிரம்பும் போது வானில் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக சூரிய ஒளிக் கதிர்கள் பூமிக்கு வர முடியாதபடி, அந்த தூசிகள், துகள்கள் மறைத்து விடும்.

நாசா விஞ்ஞானிகள் பேரில் வதந்தி:

நாசா விஞ்ஞானிகள் பேரில் வதந்தி:

எனவே உலகம் இருளில் மூழ்கினாலும், பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆகையால் சூரிய புயலை நினைத்து மக்கள் பயப்பட வேண்டியது இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

வானத்தினை அடைக்கும் புயல்:

வானத்தினை அடைக்கும் புயல்:

சூரிய மண்டல புயலால் ஏற்படும் தூசி, துகள்கள் 220 மணி நேரத்துக்கு வானத்தை அடைத்து விட்டது போல மாற்றி விடும். அதற்கு ஏற்ப மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாசா வேண்டுகோள் விடுத்துள்ளது" என்று பரப்பி வருகின்றார்கள்.

நம்புங்கப்பா இது வதந்திதான்:

நம்புங்கப்பா இது வதந்திதான்:

ஆனால் இது முழுக்க முழுக்க வெறும் வதந்தி என்று நாசா தெரிவித்துள்ளது. சூரியனில் அதுபோன்ற புயல்கள் ஏற்படுவது இயல்புதான். ஆனால், தூசி, துகள்கள் போன்றவை ஒளியை மறைக்கும் அளவுக்கு வியாபிக்க வாய்ப்பில்லை. இப்புயல்களால் மிகச்சிறிய அளவிலான பாதிப்புகளே ஏற்படும்.

பயம் தேவையில்லை:

பயம் தேவையில்லை:

மேலும், இவ்வதந்திச் செய்திகளால் யாரும் பயப்படவோ, பதட்டமடையவோ தேவையில்லை. இதுமுழுவதுமாக கற்பனையான செய்திதான் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

ஆதவனை மறைக்க முடியுமா:

ஆதவனை மறைக்க முடியுமா:

எனவே மக்களே "ஆயிரம் புயல்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை" என்பதை மனதில் கொண்டு அந்த 6 நாட்களும் சந்தோஷமாக குட்மார்னிங் சொல்லி விட்டு வழக்கம் போல வேலைகளைப் பாருங்கள்.

English summary
It may feel like winter is slowly squeezing all the sunlight out of your day, but if you see any news stories claiming the Earth is headed for ‘Six Days of Total Darkness’ then don’t start stocking up on the tins of beans and torches just yet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X