For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விண்வெளி வீரர்களுக்கு பீட்ஸா டெலிவரி... ஆகாயத்தில் நடந்த 'காக்கா முட்டை' கதை!

விண்வெளி வீரர் ஒருவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நாசா தனது ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு பீட்ஸா டெலிவரி செய்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    விண்வெளிக்கு பீட்ஸா டெலிவரி செய்த நாசா...வீடியோ

    நியூயார்க்: விண்வெளி வீரர் ஒருவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நாசா தனது ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு பீட்ஸா டெலிவரி செய்து இருக்கிறது. மேலும் பீட்ஸாவுடன் ஐஸ்கிரீம், சாக்லேட் என நிறைய சர்ப்ரைஸ் கிப்டுகளை கொடுத்து இருக்கிறது.

    'பாப்லோ நெஸ்போலி' என்ற விண்வெளி வீரரின் பல நாள் ஆசையை நிறைவேற்றவே நாசா இந்த செயலை செய்து இருக்கிறது. இவர் நீண்ட நாட்களாக நாசாவிடம் பீட்ஸா வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்.

    மீண்டும் அவர் இது போல பீட்ஸாவுக்கு ஆடம் பிடிக்க கூடாது என்பதற்க்காக வித்தியாசமான வசதி ஒன்றையும் வானத்தில் செய்து கொடுத்து இருக்கிறது. தற்போது பாப்லோ, நாசாவுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.

    நாசாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன்

    நாசாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன்

    விண்வெளியில் ஆராய்ச்சி மையம் வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அமெரிக்காவின் நாசா நிறுவனம் விண்வெளியில் ஐந்துக்கும் அதிகமான விண்வெளி ஆராய்ச்சி மையங்களை நிர்வகித்து வருகிறது. இங்கு மாசக்கணக்கில் தங்கி விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி செய்வார்கள். பூமியை மட்டும் இல்லாமல் மற்ற கிரகங்களையும் இவர்கள் விண்வெளியில் இருந்து ஆராய்ச்சி செய்வார்கள். இவர்களுக்கு கேப்சுல் வடிவில் உணவு அனுப்பப்படும்.

    பீட்ஸா கேட்ட பாப்லோ

    பீட்ஸா கேட்ட பாப்லோ

    நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் பாப்லோ நெஸ்போலி. பல மாதங்களாக விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் அவர் வானத்தில் இருந்து இந்திய பெருங்கடலை ஆராய்ந்து வருகிறார். இவர் பல நாட்களாக நாசா நிறுவனத்திடம் பீட்ஸா அனுப்பும்படி கேட்டு இருக்கிறார். இத்தாலியை பூர்வீகமாக கொண்ட இவரால் பீட்ஸா இல்லாமல் சாப்பிடுவது கஷ்டமாக இருந்திருக்கிறது. இதற்காக வாராவாரம் பீட்ஸா வேண்டும் என வீடியோவில் பேசி அனுப்பி இருக்கிறார்.

    நாசாவின் சர்ப்ரைஸ் கிப்ட்

    நாசாவின் சர்ப்ரைஸ் கிப்ட்

    இவரின் இந்த கோரிக்கைக்கு நாசா மறுப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நாசா அவர் வேலை பார்த்த ஆராய்ச்சி மையத்திற்கு ஆய்வு உபகரணங்களை அனுப்பியது. அப்போது அந்த உபகரணங்களுடன் சேர்த்து பீட்ஸாவும் அனுப்பி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அத்துடன் ஐஸ்கிரிம், சாக்லேட் என பூமியில் சாப்பிடும் பல உணவுப் பொருள்களையும் அனுப்பி இருக்கிறது. அவருடன் இருந்த மற்ற வீரர்களுக்கும் பீட்ஸா அனுப்பி இருக்கிறது. இந்த சர்ப்ரைஸ் கிப்டால் பாப்லோ ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்.

    இனி ஸ்பேஸிலும் பீட்ஸா செய்யலாம்

    இனி ஸ்பேஸிலும் பீட்ஸா செய்யலாம்

    பாப்லோவுக்கு நாசா இன்னொரு சர்ப்ரைஸும் கொடுத்து இருக்கிறது. அதன் படி பீட்ஸா செய்யும் சின்ன மெஷின் ஒன்றை அதில் அனுப்பி இருக்கிறது. வாரம் ஒரு பீட்ஸா செய்யும் அளவுக்கு தேவையான பொருட்களையும் நாசா அதனுடன் அனுப்பி உள்ளது. அதன்படி ''இனிமேல் பீட்ஸா கேட்டு தொந்தரவு செய்ய கூடாது, எப்போது வேண்டுமோ அப்போது பீட்ஸா செய்து கொள்ளுங்கள்'' என்று செல்லமாக கண்டித்து இருக்கிறது. உலகிலேயே நாசாதான் முதல் முறையாக விண்வெளியில் பீட்ஸா டெலிவரி செய்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    NASA delivers pizza to space for its Astronauts. It also delivers a machine which can create pizza and ice creams.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X