For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூமிக்கு தம்பிப் பாப்பா பொறந்துருச்சு.... "கெப்ளர் 452பி"... பூமி போன்ற புதிய கோளை கண்டுபிடித்த நாசா

Google Oneindia Tamil News

நியூயார்க்: பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. இப்புதிய கோளுக்கு 'கெப்ளர் 452பி' என பெயரிடப் பட்டுள்ளது.

சூரியக் குடும்பத்திற்கு வெளியே பூமியைப் போன்று வேறு கோள்கள் இருக்கின்றனவா என்பது குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் சக்தி வாய்ந்த கெப்ளர் தொலைநோக்கி விண்கலத்தை நாசா விண்ணில் ஏவியது.

இந்த விண்கலமானது தற்போது பூமியை ஒத்த புதிய கோள் ஒன்றைக் கண்டறிந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கெப்ளர் 452 பி...

கெப்ளர் 452 பி...

இந்தப் புதிய கோளிற்கு கெப்ளர் 452 பி என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்தப் புதிய கோள் சூரியக் குடும்பத்துக்கு வெளியே பூமியில் இருந்து சுமார் 1400 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

பூமியின் தட்பவெப்பம்...

பூமியின் தட்பவெப்பம்...

இந்தக் கோளில் பூமியில் உள்ள தட்பவெப்ப நிலையை ஒத்த தட்பவெப்பம் உள்ளதாக டெல்லியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த கோளில் பாறைகள் அதிகம் இருக்கிறதாம்.

உயிர் வாழ ஏற்றது...

உயிர் வாழ ஏற்றது...

மேலும், இந்தப் புதிய கோளில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை காணப்படுவதாகவும், அங்கு தண்ணீர் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கோளானது பூமியை விட சுமார் 60 சதவீதம் பெரிய அளவில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

385 நாட்கள்...

385 நாட்கள்...

பூமியை விட சில நாட்கள் கூடுதலாக, அதாவது இந்தப் புதிய கோளானது 385 நாட்களுக்கு ஒருமுறை தனது சூரியனை முழுமையாக சுற்றி வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நம்ம சூரியனை விட பழமையானது...

நம்ம சூரியனை விட பழமையானது...

இந்தப் புதிய கோளானது 6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும் என்றும், நம்முடைய சூரியனை விட 1.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது இந்த புதிய பூமியின் சூரியன் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதிக வெளிச்சம்...

அதிக வெளிச்சம்...

பூமியின் தட்பவெப்பமே இங்கு நிலவுவதாக கூறப்பட்டாலும், இந்தப் புதிய கோளில் பூமியை விட 20% அதிக வெளிச்சம் உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் சுற்றுப்பாதை பூமியின் சுற்றுப்பாதையை விட 5% அதிகம்.

மிகப் பெரிய சூரியன்

மிகப் பெரிய சூரியன்

நம்முடைய சூரியனை விட புதிய பூமியின் சூரியன் 4 மடங்கு பெரியதாகும் 10 சதவீதம் கூடுதல் வெளிச்சமும் கிடைக்கிறது.

நீர் நிலைகள் வற்ற வாய்ப்பு

நீர் நிலைகள் வற்ற வாய்ப்பு

புதிய கிரகத்தின் சூரியன் மிகப் பெரியதாக இருப்பதாலும், அதிக வெப்பத்தைக் கொடுப்பதாலும், புதிய கிரகத்தில் உள்ள நீர்நிலைகள் வற்றிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சூரியனின் கடைசிக் காலமாக இருக்கலாம்

சூரியனின் கடைசிக் காலமாக இருக்கலாம்

இந்தப் புதிய கிரகத்தின் சூரியனின் கடைசிக்காலமாக இது இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால்தான் பிரகாசம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த சூரியன் தனது அழிவுக் கட்டத்தில் இருந்தால் புதிய கிரகத்தின் தட்பவெப்ப நிலையும் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

1028 கிரகங்கள்...

1028 கிரகங்கள்...

தற்போது பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வரும் கெப்ளர் தொலைநோக்கியானது, இதுவரை 1028 கிரகங்களையும், 4661 கிரகம் போன்றவற்றையும் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது.

எக்ஸோபிளானட்...

எக்ஸோபிளானட்...

1995ம் ஆண்டு நமது பூமியைப் போலவே ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. அது நமது பூமி எப்படி சரியனைச் சுற்றி வருகிறதோ அதேபோல இன்னொரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இதற்கு எக்ஸோபிளானட் என்று பெயர். இதுபோன்ற எக்ஸோபிளானட்டுகள், பூமி அல்லது அதை விட சிறிய அளவில் உள்ளன.

ப்ளூட்டோ...

ப்ளூட்டோ...

இதுவரை நாம் கண்டுபிடித்துள்ளது 9 கிரகங்கள்தான். அதில் ப்ளூட்டோ தற்போது குள்ள கிரகமாக தரம் குறைக்கப்பட்டு விட்டது.

கெப்ளர் 186...

கெப்ளர் 186...

கடந்த ஆண்டுதான் குடியேறக் கூடிய வகையிலான பூமியைப் போன்ற ஒரு கிரகத்தை கெப்ளர் கண்டுபிடித்தது. இதுவும் பூமியைப் போலவே உள்ளதாக கூறப்பட்டது. இதற்கு கெப்ளர் 186எப் எனறு பெயரிடப்பட்டது. இது பூமியலிருந்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நம்மைப் போலவே உள்ள ஒரு கிரகமாக இது கருதப்படுகிறது.

பூமியை விட பெரியது...

பூமியை விட பெரியது...

அதேபோல இன்த ஆண்டு ஜனவரியில் கெப்ளர் 438 பி, 442 பி என மேலும் இரு கிரகங்களை கெப்ளர் கண்டுபிடித்தது. இதில் பி கிரகமானது பூமியை விட 12 சதவீதம் பெரிதாகும். 442 பி கிரகமானது 33 சதவீதம் பெரிதாகும்.

பூமியின் அளவில்...

பூமியின் அளவில்...

ஜூலை மாதத்தில் கெப்ளர் அதே நட்சத்திரத்தை சுற்றி 4 கிரகங்கள் சுற்றி வருவதாக கண்டுபிடித்தது. அந்த நட்சத்திரத்திற்கு கெப்ளர் 444 என பெயரிடப்பட்டுள்ளது. அனைத்துமே பூமியின் அளவில் உள்ளதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

452பி எப்போது போகலாம்

452பி எப்போது போகலாம்

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூமியை ஒத்த கிரகத்தில் நாம் போய் குடியேற முடியுமா என்று தெரியவில்லை. இருப்பினும் நம்மைப் போல உள்ள ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளோம் என்பது முக்கியமானது.

English summary
Astronomers hunting for another Earth have found what may be the closest match yet, a potentially rocky planet circling its star at the same distance as Earth orbits Sun, Nasa said on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X