For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செவ்வாய் - வியாழன் இடையே.. குட்டி கிரகத்தில் வித்தியாசமான மலை!

Google Oneindia Tamil News

நியூயார்க்: செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே உள்ள குள்ளகிரகமான செரஸில் வித்தியாசமான மலை ஒன்று இருப்பதை நாசாவின் டான் விண்கலம் படமெடுத்து அனுப்பியுள்ளது. இந்த மலையின் வித்தியாசமான அமைப்பு விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூரிய குடும்பத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே பல்லாயிரம் கோடி விண்கற்களைக் கொண்ட ஒரு பகுதி உள்ளது. இந்த விண்கற்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்தப் பகுதியில் தான் செரஸ் கிரகம் உள்ளது

நாசாவின் டாண் விண்கலம் இந்த குட்டிக் கிரகத்தில் இறங்கி ஆராய்ச்சிகள் செய்து வருகிறது. அங்கிருந்தபடி, விதவிதமான புகைப்படங்களையும் டான் அனுப்பி வருகிறது.

மிகப்பெரிய விண்கல்...

மிகப்பெரிய விண்கல்...

விண்வெளிக் கற்களிலேயே பெரிதான செரஸ்-ன் சுற்றளவு 950 கிலோ மீட்டர்களாகும். 1801ம் ஆண்டு ஜனவரி மாதம் கண்டறியப்பட்ட இந்தக் கிரகத்திற்கு ரோமானிய விவசாய தேவதையின் பெயர் சூட்டப்பட்டது. விண்வெளிக் கற்களிலேயே முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்ற பெருமையும் செரஸுக்கு உண்டு.

கண்டுபிடிப்பு...

கண்டுபிடிப்பு...

இத்தாலிய விண்வெளி ஆய்வாளரான ஜியூசெப்பே பியாஸி இந்தக் கிரகத்தை எதேச்சையாகக் கண்டுபிடித்தார். ஆனால் இதன் சரியான இடத்தைக் கண்டுபிடித்தவர் கணிதவியல் அறிஞரான கார்ல் காஸ் என்பவர் ஆவார்.

டான்...

டான்...

இந்நிலையில், கடந்த 2007ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘டான்' என்ற விண்கலத்தை விண்கற்கள் குறித்த ஆய்வுக்காக விண்ணில் ஏவியது. 1.7 பில்லியன் மைல் தூரம் பயணித்த டான், கடந்த 2011ம் ஆண்டு வெஸ்டா எனும் சிறுகோளைச் சென்றடைந்தது.

முதலில் வெஸ்டா...

முதலில் வெஸ்டா...

வெஸ்டாவில் தங்கி ஓராண்டு கால ஆய்வு மேற்கொண்ட டான், அங்கிருந்தபடி நாசாவிற்கு வெஸ்டாவின் புகைப்படங்களை அனுப்பியது. பின்னர் 2012ம் ஆண்டு செரஸ் கிரகத்தை நோக்கி, தனது பயணத்தைத் தொடங்கிய டான், கடந்த 2015ம் ஆண்டு வெற்றிகரமாக அங்கு தரையிறங்கியது.

மர்மங்கள்...

மர்மங்கள்...

பின்னர் அங்கிருந்தபடி செரஸ் கிரகத்தின் நில அமைப்புகளை டான் படமெடுத்து அனுப்பி வருகிறது. அந்த படங்களில் பெரும் பள்ளங்கள், பிரகாசமான மர்மமான பிரதிபலிப்புகள், புள்ளிகள், பெரிய பாறைகள் போன்றவை உள்ளன.

குட்டி மலை...

குட்டி மலை...

இந்நிலையில், செரஸ் அனுப்பிய புகைப்படமொன்றில் சிறிய வித்தியாசமான மலையும், அதன் அருகிலேயே மிகப்பெரிய பள்ளமொன்றும் இருப்பது தெரிய வந்துள்ளது. தரையில் இருந்து அப்படியே பெயர்த்து, அருகில் கொட்டி வைத்தது போல் இந்த மலை காணப்படுகிறது.

அகுனா மோன்ஸ்...

இந்த மலையானது விஞ்ஞானிகளை அதிக ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தரையிலிருந்து மூன்று மைல் அளவு உயரம் உடையதாக இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. தற்போது இந்த மலைக்கு அகுனா மோன்ஸ் என அவர்கள் பெயரிட்டுள்ளனர்.

ஆராய்ச்சி...

அதாவது தனிமையான மலை என்பது இதற்குப் பொருளாகும். அருகில் வேறு எந்த மலைகளும் இல்லாமல் தன்னந்தனியே நின்றிருக்கும் இந்த மலை குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.

English summary
In a latest images released by NASA’s Dawn Spacecraft the mysterious mountain Ahuna Mons appeared In image pile of material is actually 3 miles high and on the surface of dwarf planet Ceres which is making it quite mysterious.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X