For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீல நிற ராட்சசன்.. பூமியில் இருந்து 13.4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் புதிய நட்சத்திரம்!

பூமியில் இருந்து மிக அதிக தூரத்தில் தனியாக இருக்கும் நட்சத்திரம் ஒன்று நாசா விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: பூமியில் இருந்து மிக அதிக தூரத்தில் தனியாக இருக்கும் நட்சத்திரம் ஒன்று நாசா விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நட்சத்திரத்திற்கு இக்கார்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரம் சூரியனை விட பல மடங்கு பெரியது.

இவ்வளவு தூரத்தில் ஒரு நட்சத்திரத்தை இதுவரை எந்த நாட்டு விஞ்ஞானிகளும் கண்டுபிடித்தது இல்லை. இந்த நட்சத்திரம் தனியாக நீல நிறத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைநோக்கி

தொலைநோக்கி

நாசா அனுப்பி இருக்கும் ''தி ஹப்பிள் ஸ்பேஸ் டெலிஸ்கோப்'' என்ற தொலைநோக்கிதான் இந்த நட்சத்திரத்தை கண்டுபிடித்தது. இந்த நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் நீல நிறத்தில் இருந்துள்ளது. அந்த தொலைநோக்கியில் இருக்கும் புதிய ஈர்ப்பு விசை தொழில்நுட்பத்தின் மூலம் இந்த நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு

எவ்வளவு

இதன் வயது 9 பில்லியன் வருடத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் சிறப்பம்சமே பூமியில் இருந்து இது இருக்கும் தூரம்தான். பூமியில் இருந்து 13.4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இந்த நட்சத்திரம் இருக்கிறது. இவ்வளவு தூரத்தில் ஒரு நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதே இல்லை.

கோள்கள் இல்லை

கோள்கள் இல்லை

இதற்கு இன்னொரு சிறப்பம்சம் இருக்கிறது. இந்த நட்சத்திரம் பூமியை விட பெரிதாக இருந்தாலும் இது தனியாக இருக்கிறது. இதன் குடும்பத்தில் எந்த கோள்களும் இல்லை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட குடும்பங்களில் இந்த நட்சத்திரம் மட்டுமே இவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது.

நாசா ஆராய்ச்சி

நாசா ஆராய்ச்சி

தற்போது இந்த நட்சத்திரத்தை நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதன் வெளிச்சம் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே செல்கிறது. இதனால் இது இன்னும் பல பில்லியன் வருடங்களுக்கு பின் அழிந்து, பெரும் கருங்குழியாக மாறும் என்று கூறப்படுகிறது. இதன் நீல நிறம் கண்ணை கவரும் வகையில் இருக்கும் என்றுள்ளனர்.

English summary
NASA finds a new star which is 13.4 billion lightyears from Earth. Nasa is currently researching in this star which bigger than Sun.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X