For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்வதேச விண்வெளி நிலையத்தில் புகுந்து வீரரைத் துரத்திய கொரில்லா... வைரலாகும் நாசா வீடியோ!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பவுள்ள விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி, தன் சக நண்பர்களை மகிழ்விப்பதற்காக வித்தியாசமான விளையாட்டைச் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட நாட்கள் தங்கிய அமெரிக்க விண்வெளி வீரர் என்ற சாதனையை படைத்தவர் ஸ்காட் கெல்லி. இவர் நாளை பூமிக்கு திரும்புகிறார்.

கடந்தாண்டு மார்ச் 27ம் தேதி முதல் விண்வெளி நிலையத்தில் இருந்தபடி ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார் ஸ்கார். ஆய்வுகளுக்கு இடையே, விண்வெளியில் இருந்தபடியே பூமியை அழகான புகைப்படங்களாக எடுத்து அவற்றை தனது சமூகவலைதளப் பக்கத்திலும் அவர் வெளியிட்டு வருகிறார்.

திட்டம்...

திட்டம்...

இந்நிலையில், 340 நாட்கள் வெற்றிகரமாக விண்வெளியில் தங்கிய ஸ்காட், நாளை பூமிக்கு திரும்புகிறார். தனது பூமி பயணத்திற்கு முன்னதாக தனது சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள தன் நண்பர்களை சில நிமிடங்கள் மகிழ வைக்க அவர் திட்டமிட்டார்.

கொரில்லா வேடம்...

கொரில்லா வேடம்...

அதன்படி, கொரில்லா வேடமணிந்த ஸ்காட் விண்வெளி நிலையத்திற்குள் தனது நண்பர்களைத் துரத்திப் பிடித்து விளையாடினார். இது வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, ஸ்காட்டின் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

வைரல்...

வைரல்...

சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ, விண்வெளி நிலையத்தில் கொரில்லா என்ற பெயரில் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இறுக்கமான வாழ்க்கை...

இறுக்கமான வாழ்க்கை...

எப்போதும் ஆய்வுகள், பூமிக்கு வெளியே வெகு தொலைவில் அந்தரத்தில் வாழ்க்கை என்ற இறுக்கமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் விண்வெளி வீரர்களை மகிழ்விப்பதற்காக இந்த கொரில்லா வேடத்தைப் போட்டுள்ளார் ஸ்காட்.

ரூ. 30 லட்சம் செலவு...

ரூ. 30 லட்சம் செலவு...

இந்த கொரில்லா உடை 4.3 பவுண்ட் எடை கொண்டது. ஒரு பவுண்ட் எடையுள்ள பொருளை விண்வெளிக்கு அனுப்ப பொதுவாக 10 ஆயிரம் டாலர் செலவாகுமாம். அதன்படி, இந்த கொரில்லா உடையை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப நாசாவிற்கு 43 ஆயிரம் டாலர் செலவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 30 லட்ச ரூபாய் ஆகும்.

அன்புப்பரிசு...

அன்புப்பரிசு...

விண்வெளியில் தங்கியுள்ள வீரர்களை மகிழ்விப்பதற்காக அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அவ்வப்போது இத்தகைய பரிசுப் பொருட்களை நாசா மூலமாக அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விதவிதமான போட்டோக்கள்...

விதவிதமான போட்டோக்கள்...

விண்ணில் இருந்தபடி 400க்கும் அதிகமான ஆராய்ச்சிகளை செய்துள்ள ஸ்காட், 700க்கும் அதிகமான புகைப்படங்களை எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பயனுள்ள பயணம்...

பயனுள்ள பயணம்...

தங்களது பயணம் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்று கூறும் ஸ்காட், விண்வெளியில் தங்கியிருந்த போது 3 முறை பூமிக்கு மேலாக மிதந்துள்ளார்.

ரஷ்யவீரரின் சாதனை...

இதற்கு முன்னர் கெல்லி 159 நாட்கள் இதே விண்வெளி நிலையத்தில் தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். அதிகபட்சமாக அமெரிக்க வீரர்கள் 6 மாத கால அளவிற்கே விண்வெளியில் தங்கியுள்ளனர். ஆனால் ரஷ்ய விண்வெளி வீரர் பலேரி போலியா கோப் என்பவர் 1994-95-ம் ஆண்டுகளில் 437 நாட்கள் ரஷ்யாவின் விண்வெளியில் தங்கியிருந்ததே சாதனையாக உள்ளது.

English summary
On Tuesday, March 1, US astronaut Scott Kelly returns home after a year aboard the International Space Station (ISS). To lighten the mood aboard the ISS and perhaps, as a way of celebrating his year in space Kelly recorded himself chasing fellow astronaut Tim Peake around the space station in a gorilla suit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X