For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு.. பூமியை விட மூன்று மடங்கு அதிகம்.. நாசா தகவல்!

பூமியை விட மூன்று மடங்கு அதிகம் தண்ணீர் கொண்ட கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பூமியை விட 3 மடங்கு தண்ணீர் அதிகம் உள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு- வீடியோ

    நியூயார்க்: பூமியை விட மூன்று மடங்கு அதிகம் தண்ணீர் கொண்ட கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதன் பெயர் 'டபுள்யூஏஎஸ்பி-39 பி' என்பதாகும்.

    இது பூமியில் இருந்து 700 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. நாசா விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

    அந்த கிரகத்தில் இருந்து தண்ணீர் ஆவி ஆவதை வைத்தும், அது எதிரொளிக்கும் நிறத்தை வைத்தும் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.

    தண்ணீர்

    தண்ணீர்

    இந்த கிரகத்தில் சனி பூமியை விட அதிக அளவு தண்ணீர் இருக்கிறது. சனி கிரகத்தில் அளவை வைத்து கணக்கிட்டால் அதை விட 3 மடங்கு தண்ணீர் இந்த கிரகத்தில் இருக்கிறது. இதுவரை நாசா கண்டுபிடித்த எந்த கிரகத்திலும் இந்த அளவிற்கு தண்ணீர் இருந்தது இல்லை.

    அதற்கும் சூரியன்

    அதற்கும் சூரியன்

    அதேபோல் இந்த கிரகமும் அதன் சூரிய குடும்பத்திலேயே இருக்கிறது. இதன் சூரியனுக்கு டபுள்யூஏஎஸ்பி-39 என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அதன் சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகம் இருக்கும் என்று கூறப்படவில்லை. ஆனால் இந்த கிரகம் சூரியனை 4 நாட்களுக்கு ஒரு முறை சுற்றுகிறது.

    பூமியில் இருந்து என்ன வித்தியாசம்

    பூமியில் இருந்து என்ன வித்தியாசம்

    இந்த கிரகம் சூரியனை சுற்றினாலும் தன்னை தானே பூமியை போல சுற்றுவது இல்லை. இதனால் இதன் ஒரு பகுதி எப்போது வெயிலாக இருக்கும். ஒரு பகுதி எப்போதும் இருளாக இருக்கும். அதாவது ஒரு பகுதி சூரியனை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

    வெப்பம்

    வெப்பம்

    பூமிக்கும் சூரியனுக்கும் எவ்வளவு தூரம் இருக்குமோ, அதைவிட 20 மடங்கு குறைந்த தூரம் இந்த கிரகத்திற்கும் அதன் சூரியனுக்கும் இருக்கிறது. இதனால் சூரியன் படும் பகுதியில் 776.7 டிகிரி வரை வெப்பம் இருக்கிறது. இதனால் அங்கு மனிதர்கள் வாழ முடியாது. ஆனால் வேறு உயிரினம் வாழ வாய்ப்புகள் இருக்கிறது.

    English summary
    NASA founds water in a new solar system's planet. The solar system has a sun named WASPI 39. In this system, planet called WASPI 39b has water in it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X