For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதன்முறையாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பூச்செடி வளர்க்கும் நாஸா

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நாஸா விஞ்ஞானிகள் பூச்செடிகளுக்கான விதைகளை திங்கட்கிழமை தூவியுள்ளனர். புத்தாண்டின்போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பூக்கள் பூப்பதை பார்க்கலாம்.

நாஸா விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பூச்செடிகளை வளர்க்க நினைத்தனர். இதையடுத்து ஜின்னியாஸ் பூச்செடி விதைகள் நேற்று விண்வெளி ஆய்வு மையத்தில் தூவப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தை விண்வெளியில் பூக்கும் பூக்கள் வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NASA to grow flowers in space for first time

பிற பூச்செடிகளையும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்க்க முடியுமா என்பதை பரிசோதிக்கவே முதலில் ஜின்னியாஸ் விதைகள் தூவப்பட்டுள்ளது. தற்போது தான் முதன்முறையாக விண்வெளி ஆய்வு மையத்தில் பூச்செடி வளர்க்கப்படுவதாக நாசா அறிவித்துள்ளது.

காய்கறி செடியை வளர்ப்பதை விட சவாலானது பூச்செடியை வளர்ப்பது. ஆய்வு மையத்தில் போதிய சூரிய ஒளி கிடைக்க வேண்டும் என நாசா விஞ்ஞானி ஜியோயியா மாஸா தெரிவித்துள்ளார்.

ஜின்னியாஸ் 60 நாட்கள் வளரும். அது வளர்கையில் ஆய்வு மையத்தில் எல்இடி விளக்குள் 10 மணிநேரம் ஆன் செய்து வைக்கப்படும், 14 மணிநேரம் ஆப் செய்து வைக்கப்படும். 2017ம் ஆண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தக்காளி செடியை வளர்க்க நாஸா திட்டமிட்டுள்ளது.

English summary
Flowers could be blooming on the International Space Station (ISS) after the New Year, thanks to NASA's first flowering crop experiment on the orbiting laboratory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X