For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைரம் போல ஜொலிக்கும் நட்சத்திரக் கூட்டம்... படம் பிடித்தது நாசாவின் ஹப்பிள்!

Google Oneindia Tamil News

நாசா: வைரம் போன்ற தோற்றம் கொண்ட நட்சத்திரக் கூட்டத்தை நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பியுள்ளது. பார்க்கவே அழகாக காட்சி தருகிறது இந்த நட்சத்திரக் கூட்டம்.

வானில் ஜொலிக்கும் ஒவ்வொரு நட்சத்திரமும் அழகுதான்.. கூடவே வியப்பும். மொட்டை மாடியில் நட்சத்திரங்களைப் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் கூட, வீட்டுக்குள் நட்சத்திரக் கூட்டத்தை ஸ்டிக்கர் மூலம் உருவாக்கி ரசிக்கின்றனர்.

இந்நிலையில், வைரம் போன்ற ஜொலிப்புடன் புதிய நட்சத்திரக் கூட்டத்தை ஹப்பிள் படம் பிடித்துள்ளது.

டிரம்ப்ளர்...

டிரம்ப்ளர்...

நமது பால்வழி மண்டலத்தில் நாம் இதுவரை பார்த்த நட்சத்திரங்களிலேயே பிரமிக்க வைக்கக் கூடிய ஜொலிப்புடன் இவை காட்சி தருகின்றன. இந்த நட்சத்திரக் கூட்டத்திற்கு டிரம்ப்ளர் 14 (Trumpler 14) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

8000 ஒளி ஆண்டுகள்...

8000 ஒளி ஆண்டுகள்...

மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டப் பகுதியான கரீனா நெபுலாவிலிருந்து 8000 ஒளியாண்டுகள் தொலைவில் இந்த வைர நட்சத்திரக் கூட்டம் உள்ளது.

வயது...

வயது...

இந்த வைர நட்சத்திரக் கூட்டத்திற்கு வயது 5 லட்சம் ஆண்டுகள்தான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மிகப் பிரகாசமான நட்சத்திரங்கள் இந்த நட்சத்திரக் கூட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

பிரகாசமானவை...

பிரகாசமானவை...

நமது பால்வழி மண்டலத்திலேயே மிகப் பிரகாசமானவை இந்த நட்சத்திரங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைட்ரஜன்...

ஹைட்ரஜன்...

வெள்ளை மற்றும் நீல நிறத்திலான இந்த நட்சத்திரங்கள்தொடர்ந்து பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கின்றன. அதில் உள்ள ஹைட்ரஜன்தான் இப்படி பற்றி எரிந்து கொண்டுள்ளன.

சூப்பர்நோவா...

சூப்பர்நோவா...

சில மில்லியன் ஆண்டுகளில் இவை வெடித்துச் சிதறி விடுமாம். அதாவது சூப்பர் நோவாவாக மாறி விடும்.

ஹப்பிளின் பணி...

ஹப்பிளின் பணி...

இந்த நட்சத்திரக் கூட்டம் எரிந்து வருவதே காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. தொடர்ந்து இந்த நட்சத்திரங்களை ஹப்பிள் கண்காணித்து வருகிறது.

2000 நட்சத்திரங்கள்...

2000 நட்சத்திரங்கள்...

இந்த நட்சத்திரக் கூட்டத்துக்குள் கிட்டத்தட்ட 2000 நட்சத்திரங்கள் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் விதம் விதமான அளவிலானவை.

பாப்புலரான நட்சத்திரம்...

இந்த கூட்டத்திலேயே ரொம்பப் பாப்புலரான பையன் யாருன்னா அது HD 93129Aa என்ற நட்சத்திரம்தான். இது நமது பால் வழி மண்டலத்திலேயே மிகப் பெரியது, படு சூடானதும் கூட, வெளிச்சமும் ஜாஸ்தி.

English summary
The Hubble Space Telescope captured this jaw dropping image of a star cluster known as Trumpler 14 located within the Carina Nebula. The stars of the Trumpler 14 star cluster are some of the most luminous in the galaxy and their abnormally hot temperatures and close proximity illuminates space to a degree rarely seen. NASA tweeted this image mentioning them as dazzling diamonds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X