For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூமியை போன்ற 7 புதிய கோள்களை கண்டுபிடித்தது நாசா !

பூமியைப் போன்ற 7 கோள்களை கொண்ட புதிய சூரிய குடும்பத்தை நாசா கண்டுபிடித்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பூமியை போன்று 7 புதிய கோள்களை நாசா கண்டுபிடித்துள்ளது. இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.

விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா கோள்கள் குறித்து அறியும் வகையில் நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்செர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

NASA Just Found A Solar System With 7 Earth

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போன்றே மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. அந்த 3 கோள்களில் நீர் ஆதாரம், பாறைகள் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டு தொலைவில் இந்த கோள்கள் உள்ளன. அங்கு மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான காற்று, நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், பூமியை போன்றே மேற்பரப்பும் அடர்த்தியும் காணப் படுகிறது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
NASA today (Feb 22) announced a remarkable new discovery. An entire system of 7 Earth-sized planets found orbiting around a dwarf star. The new Solar system is just 39 light-years away
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X